60019921-indira

றைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் பொடேதார்.  அவர் தனது அரசியல் அனுபவங்களை, “சினார் லீவ்ஸ்”  என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் 30ம் தேதி வெளியாகவிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சம்பவம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

indira-main

அந்த சம்பவம் குறித்து பொடேதார் எழுதியுள்ளதாவது:

“1984ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இந்திரா காந்தி காஷ்மீர் மாநிலம் சென்றார். அவருடன் நானும் சென்றேன். காஷ்மீரில்  ஒரு இந்து கோயில் மற்றும் மசூதிக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு  காரில் ஓய்வு விடுதிக்கு திரும்பினோம்.

அப்போது ‘‘கோயிலுக்குச்  சென்று வழிபட்டபோது, கோயில் கருவறையில் வாடி வதங்கிய ஒரு மரம் காட்சி அளித்தது. அநேகமாக என் வாழ்நாள் எண்ணப்படுவதன் அறிகுறியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று நீண்ட பெருமூச்சுவிட்டார் இந்திரா.

 

பொடேதார்
பொடேதார்

அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கடுத்த சில நாட்களில் அவர் சுட்டுக்கொல்லப்படார்.”

– இவ்வாறு தனது நூலில் பொடேதார் கூறியுள்ளார்.