த. அ. 1

10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..??

சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று காயவைத்து எடுத்தாயிற்று..

இனிமேல்தான் தெரியும்;
எத்தனை சி.டி.க்கள் கம்யூட்டரில் ஓடும்…
எத்தனை சி.டி.க்கள் வீட்டைவிட்டு ஓடும் என்று.. !!

த.அ. 2

உயிர், ஒட்டுமொத்த உடமைகளை இழந்தவர்களோடு ஒப்பிடும்போது எங்கள் இழப்பு ஒன்றுமில்லைதான்.. இருந்தபோதும், மகள் மிகவிரும்பும் சேர், முதல் திருமணநாளன்று கோவையில் வாங்கிய கம்ப்யூட்டர் டேபிள் என நினைவுகள் தாங்கிய பொருட்களை எதிர்பாராமல் இழக்கிறோம்.

குட்டி நாற்காலி, கணிணி டேபிள், பழைய நினைவுகளை தன்னுள் வைத்திருந்து மழை குளிப்பாட்டியதால் மரணித்த சி.டி.க்கள் அனைத்திற்கும் “தண்ணீர் அஞ்சலி” !!

 

– செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்