டோனி
டோனி

டெல்லி:
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுக்கு எதிராக இந்தி நாளிதழுக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு டோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்து&இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்தார்.
அணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாகவும், வானிலையின் நிலைக்கு ஒத்துவராத வகையில் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் சுனில் தேவ் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார். இவரது பேட்டி டெக்கான் கிரானிக்கல் இந்தி பதிப்பில் வெளியாகியிருந்தது.
இந்த செய்தியில் உண்மை தன்மை இல்லை. அதனால் தனக்கு ரூ. 100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி அந்த நாளிதழுக்கு டோனியின் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். <!– ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் , mahendra singh dhoni , indian captain ms dhoni , Dhoni threatens to file 100 crore defamation suit against Hindi daily,  match fixing allegations against dhoni , இந்தி தினசரி எதிராக 100 கோடி மானநஷ்ட வழக்கு , டோனி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் –>