2

குழந்தைகளை வைத்து “பசங்க” படத்தை எடுத்த பாண்டிராஜ், டெரர் பாய்.

தன்னைப் பற்றி கிசு கிசு எழுதிய வார இதழில் பணியாற்றும் நிருபருக்கு போனை போட்டு கண்டமேனிக்கு காய்ச்சி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது சம்பந்தமே இல்லாத இடத்தில், சிம்புவை போட்டுக்கொடுத்து மீண்டும் தன் “திறமையை” வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தல், இது வரை இல்லாத அளவுக்கு படு டென்சனாக   நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று, கமலின் தூங்காவனம் பட பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் பேசிய பாண்டிராஜ், ‘தூங்காவனம்’ பற்றி பேசுவதை விட்டு விட்டு சிம்புவை, கோர்த்துவிட்டார்.

அவர், “ வழக்கம் போல என் ஷுட்டிங்குக்கும் சிம்பு லேட்டாகவே வந்துகிட்டு இருந்தார். அவர்கிட்ட,கேட்டபோது, ‘சின்ன வயசுலேர்ந்து நடிச்சுட்டு இருக்கேன்ல… அதான் கொஞ்சம் போரடிக்குது’ என்றார். நான் அவரிடம் ‘கமல் சார் இத்தனை வருஷமா நடிச்சுட்டு இருக்காரு. அவருக்கே போரடிக்கல. உங்களுக்கு ஏன் போரடிக்குது’ கேட்டேன்.. அதற்கு சிம்பு, ‘என்னை கமல் சாரோட ஒப்பிடாதீங்க. அவரை மாதிரியெல்லாம் வர்றது ரொம்ப கஷ்டம்’ என்றார்” என்று பேசினார் பாண்டிராஜ்.

ஏற்கெனவே இரண்டு அணியும் அடிச்சிகிட்டு கிடக்காங்க.. இவரு வேற எரியற தீயில எண்ணைய ஊத்தறாரே என்று முணுமுணுத்தனர் பலர்.