ஜோடி சேரும் சிவா – ஸ்ருதி!

Must read

i

மீபத்தில் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் தாக்கியதும், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நிகழ்ச்சியில், “ஸ்ருதிஹாசன் கூட நடிக்கப்போகிறீர்களாமே?” என்று சிவாவிடம் கேட்கப்பட்டதற்கு, நேரடியாக பதில் சொல்லாமல், ஸ்ருதிஹாசனையும் இந்தி நடிகர் அனுத்தையும் இணைத்து சிவா பதில் சொன்னதால்தான் தாக்கப்பட்டார் என்று ஒரு செய்தி வலம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நிஜமாகவே இருவரும் ஜோடி சேரப்போகிறார்களாம்.  புதுமுக  இயக்குநர் பாக்யராஜின் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.  இந்தப் படத்தை சிவாவின் நண்பர், நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிக்கிறார்.

ஸ்ருதி ஓ.கே. சொல்லிவிட்டார் என்றும் தகவல் பரவியிருக்கிறது!

ஆக, மதுரை விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது!

More articles

Latest article