ஜெ.வை சந்தித்தார் ஓ.பி.எஸ்.!

Must read

d-1-1
செல்போனில் பிடித்தோம் நியூஸ்பாண்டை.  “இதென்ன புது பாணியாக இருக்கிறது? நான்தானே உம்மை தொடர்புகொள்வது வழக்கம்” என்றார்.
“ஓ.பி.எஸ்,  வெளியூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார், சென்னையிலேயே அடைக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ செய்திகள் றெக்கை கட்டி பறந்துகொண்டிருந்த நேரத்தில் “நீர்தான், துல்லியமாக. “இன்று காலை போயஸ் கார்டன் சென்றிருக்கிறார்.” என்றீர்.  அதற்காக பாராட்டலாமே என்றுதான்  அழைத்தோம்!”
a
 
“பாராட்டெல்லாம் இருக்கட்டும். அந்த பெரிய இடத்து சந்திப்பு தொடர்பாக சில விசயங்கள் இருக்கிறது. உறுதிப்படுத்திக்கொண்டு நாளை சொல்கிறேன். இப்போதைக்கு வேறு ஒரு செய்தியை பிடியும்!”
“சொல்லும்.. பிடித்துக்கொள்கிறோம்..!”
“அ.தி.மு.க. – த.மா.க  கூட்டணி உறுதியாகிவிட்டதாம். 180 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறதாம். த.மா.காவுக்கு 23 இடங்களாம்”

  • நம் ரீயாக்க்ஷனை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தார் நியூஸ்பாண்ட்.

More articles

Latest article