மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வரின் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, நாளை சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னர் சென்னை விரைகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  தனது பயணத்திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்துவருகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா முழு நலத்துடன்  திரும்ப, பத்திரிகை டாட் காம் பிரார்த்திக்கிறது.