ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப் பயண விவரம்

Must read

jaya election1
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா வரும் 9–ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மே மாதம் 12–ந்தேதி வரை மொத்தம் 15 பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
16–5–2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்களை முன்னிட்டு, ஜெயலலிதா, 9–4–2016 முதல் 12–5–2016 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து, கீழ்க்கண்ட அட்டவணைப்படி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் அதில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விவரம் வருமாறு:–
சென்னை – விருத்தாசலம்
9–4–2016 (சனிக்கிழமை) சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.
11–4–2016 (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), பெரம்பலூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.
தர்மபுரி – அருப்புக்கோட்டை
13–4–2016 (புதன்கிழமை) தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.
15–4–2016 (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, சிவகங்கை, மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகிறது.
காஞ்சீபுரம் – சேலம்
18–4–2016 (திங்கட்கிழமை) காஞ்சீபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி (தனி) ஆகிய தொகுதிகள் இடம்பெறுகிறது.
20–4–2016 (புதன்கிழமை) சேலத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), கங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (எஸ்.டி.), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்.டி.), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
திருச்சி – மதுரை
23–4–2016 (சனிக்கிழமை) திருச்சிராப்பள்ளியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில், திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருச்சிராப்பள்ளி (கிழக்கு), ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன.
27–4–2016 (புதன்கிழமை) மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, மேலூர், சோழவந்தான்(தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடிநாயக்கனூர், கம்பம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை(தனி), நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், காரைக்குடி, திருப்பத்தூர், திருவாடானை ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
கோவை – விழுப்புரம்
1–5–2016 (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை(தனி), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உதகமண்டலம், கூடலூர்(தனி), குன்னூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
3–5–2016 (செவ்வாய்க்கிழமை) விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், விழுப்புரம், செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகிறது.
ஈரோடு – தஞ்சாவூர்
5–5–2016 (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் (தனி), ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, அவினாசி(தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம்(தனி), காங்கேயம், குமாரபாளையம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகிறது.
8–5–2016 (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தஞ்சாவூர், திருவிடைமருதூர்(தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சீர்காழி(தனி) மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேலூர்(தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகிறது.
நெல்லை – வேலூர்
10–5–2016 (செவ்வாய்க்கிழமை) திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகிறது.
12–5–2016 (வியாழக்கிழமை) வேலூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ்வைத்தியணான்குப்பம் (கே.வி.குப்பம் தனி), போளூர், ஆரணி, செங்கம், கலசபாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகிறது.
புதுச்சேரி
ஏப்ரல் 25–ந்தேதி புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். அதன்படி, 25–4–2016 அன்று மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்களம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ்நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், மணவெளி, ஏம்பலம்(தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு (தனி), திருநள்ளார், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம், மாஹே, ஏனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article