ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானம் எங்கிருந்து வந்தது? : ராமதாஸ் டுவிட்ஸ்

Must read

ramadas1
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா பேசினார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இன்றைய டுவிட்டர் பதிவுகள்:
1) தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு: ஜெயலலிதா – ஜெயலலிதாவின் வெற்று அறிவிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள்… ஏமாற மாட்டார்கள்!
2) மதுவிலக்குக்கு எதிராக பா.ம.க. உருவாக்கிய மக்கள் எழுச்சியால் ஜெயலலிதாவுக்கு அச்சம். அதனால் தான் இந்த வெற்று அறிவிப்பு.
3) மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கடந்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே?
4) தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறிவந்த ஜெயலலிதாவுக்கு இப்போது திடீர் ஞானம் எங்கிருந்து வந்தது?
5 மதுவிலக்குக்கான போராட்டத்தை ஒடுக்கிய ஜெயலலிதா, என்னை இருமுறை கைது செய்த ஜெயலலிதா மதுவிலக்கு பற்றி பேசுவது நகைச்சுவை!

More articles

Latest article