ஜினி பிறந்தநாள் அன்று, “எந்திரன் 2” படத்தின் பூஜை என தகவல் வெளியானது. ஆனால் அன்று நடக்கவில்லை. வெள்ள பாதிப்பு நேரத்தில் பூஜை வேண்டாம், தை மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் திடுமென, நேற்று முன்தினம் டைரக்டர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை (16.12.15) அன்று எந்திரன் 2 படப்பிடிப்பு துவங்கும்” என்று திடுமென அறிவித்தார்.  எளிமயான முறையில் பூஜை போடப்பட்டு நேற்று படப்பிடிப்பும் துவங்கப்பட்டது.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் அவர்களது உற்சாகத்தைக் கெடுக்கும் விதமாக, அன்றே ஒரு ட்விட்டை தட்டிவிட்டார், எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன்.

எமியின் ட்விட்
எமியின் ட்விட்

அதாவது, “ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும். அதற்கான மனுவில் கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் கையெழுத்திட வேண்டும்” என்று ட்விட்டியிருக்கிறார் எமி. அதுவும், படப்பிடிப்பு நடக்கும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தே ட்விட்டியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதும், தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் அதனால் மன வருத்தத்தில் இருப்பதும் தெரிந்த செய்தி.

இந்த நிலையல், ரஜினி பட நாயகி, அதுவும் தமிழகத்தில் படப்பிடிப்பு நடக்கும்போதே ஜல்லிக்கட்டை எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முரட்டுக்காளையில் ரஜினி
முரட்டுக்காளையில் ரஜினி

ரஜினி ரசிகர்கள்கூட, “சூப்பர் ஸ்டாரே முரட்டுக்காளை படத்தில், ஜல்லிக்கட்டு காட்சியில் நடித்து கைதட்டல் பெற்றவர். அவரது படத்தில் நடிக்கும் நாயகி, மக்களின் மன நிலை தெரியாமல் இப்படி கருத்து தெரிவிக்கலாமா” என்று கொந்தளிக்கிறார்கள்.

“தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்தது வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர்தான் இப்படி ட்விட்டினார் என்றால், ஷங்கரோ, தயாரிப்பு தரப்பினரோ எமிக்கு தமிழக மக்களின் மனநிலை பற்றி சொல்லக்கூடாதா” என்று ஆதங்கப்படுகிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.