download
ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவர்களின் முகநூல் பதிவு:
 
“ஒரு கட்சியோ அல்லது அணியோ தனக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்வது அவர்களது பிரச்சார உத்தி. கருத்துக கணிப்பு என்ற பெயரில் அதே பிரச்சாரத்தைச் செய்வதோ கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்துகிற புத்தி.
ஆய்வு முயற்சி என்ற பெயரிலோ, பரபரப்புச் செய்தி என்ற போர்வையிலோ தேர்தலுக்கு முன் ஒரு கட்சிக்குப் பெரும்பர்னமை இடங்கள் கிடைக்கும் என்பதாகக் கணிப்புத் திணிப்புகளை வெளியிடுவது ஜனநாயக நெறிகளை மட்டம் தட்டுகிற வேலை.
“ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடுவேன்” என்று சிலர் சொல்வதுண்டு. அந்தச் சிலருக்கு வலை விரித்து, அவர்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க விடாமல் தடுப்பதுதான் கருத்துக் கணிப்பு ஜோதிடர்களின் நோக்கம்!”