“ச்சீய்” சவுதி இளவரசர்: அருவெறுப்பூட்டும் அதிர்ச்சி தகவல்கள்!

Must read

 

இடது புறம் அரபி உடையில் இருப்பவர்..
இடது புறம் அரபி உடையில் இருப்பவர்..

னது அமெரிக்க இல்லத்தில் பணிபுரிய வந்த மூன்று பெண்களை பலாத்காரப்படுத்த முயன்றதாக சவுதி இளவரசர் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29), அமெரிக்காவில் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லாவுக்கு .மெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய ஆடம்பர பங்களா உள்ளது.

"அந்த" பங்களா..
“அந்த” பங்களா..

37 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய மூன்று பெண்களை இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ளச் சொல்லியும், பலாத்காரப்படுத்த முயற்சித்தும் மிரட்டியுள்ளார் இளவரசர். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறையினரால் இளவரசர் கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்ப்டடார். இதன் பிறகு சுமார் 3 லட்சம் டாலர் பிணையதொகை செலுத்தி பிணையில் வெளிவந்தார்.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 21ம் தேதி இரவு ஆடம்பரமான விருந்து ஒன்றை அந்த மாளிகையில் இளவரசர் ஏற்பாடு செய்திருந்தார். விருந்தின் போது கொகைன் வகை போதை மருந்தை அதிக அளவில் பயன்படுத்திய இளவரசர், தனது ஆண் பணியாளர் ஒருவரை, ஓரின சேர்க்கைக்கு உடன்படும்படி துன்புறுத்தியிருக்கிறார்.

மறுநாள்(செப்டம்பர் 22) இரவு மீண்டும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார் இளவரசர்.

அப்போது ஆண் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளார். தனது பணிப்பெண்கள் மூவரையும், தனது செய்கையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். அடுத்து, அந்த பெண்கள் மீதும் சிறுநீர் கழிக்க முயன்றிருக்கிறார்.

இதற்கெல்லாம் அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ‘நான் ஒரு இளவரசர்….நான் நினைத்ததை செய்வேன். என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது’ என ஆவேசமாக கூறஇயபடியே, அந்த பெண்கள் மீது பாய்ந்து தாக்கியிருக்கிறார். இதனால் அந்த பெண்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதோடு ஓடிவந்து காவல்துறையினரிடம் அந்த பெண்கள் புகார் செய்ய, மறுநாள் காலை அமெரிக்க காவல்துறையினர் இளவரசரை கைது செய்தார்கள்.

சவுதி இளவரசரின் அதீத அநாகரிக செய்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபிய சட்டங்களின் படி, அந்நாட்டு குடிமகன், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால், சவுக்கடி, கல்லால் அடிப்பது அல்லது தலையை வெட்டி தண்டனை அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சவுதி நாட்டில் வீட்டுப்பணிப்பெண் ரிசானா என்பவர் குழந்தைக்கு பாலூட்டும்போது அந்த குழந்தை எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதற்காக அந்த பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article