சமீபத்துல சென்னையை கலக்குனது ரெண்டு போஸ்டருங்க.
போன அஞ்சாம்தேதி பொறந்தநாள் “கொண்டாடாத” கனிமொழியை ரொம்பவே வித்தியாசமா வாழ்த்தி ஒரு போஸ்டரு!
“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயரில் பங்கெடுக்கும் விதமாக தன் இனிய பிறந்தநாள் கொண்டாட்டத்தை கைவிட்ட” அப்படின்னு போட்டு, “நீவீர் பல்லாண்டு வாழ வாழ்த்தும்…” அப்படினு போஸ்டரு!
கொண்டாட்டத்தத்தைன் கைவிட்டாங்களே… அப்புறம் எதுக்குப்பா போஸ்டரு, பத்திரிகை வெளம்பரம்னு காச வீணாக்குறீங்க.. அந்த பணத்தை வெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரலாமுல்ல?
சொல்ல மறந்துட்டேன், கனிமொழிக்கு, “மக்களின் உணர்வே” “பாராளுமன்ற போராளியே”னு பட்டம் கொடுத்திருக்காங்க!
இன்னொரு போஸ்டரு, “புரட்சி தமிழகம்” கட்சியோட நிறுவன தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியோடது. சும்மா தெலுங்குலேயே விஜயகாந்தை விளாசி எடுத்திருக்காரு மனுசன்!
எப்படித்தான் இப்படி எல்லாம் ஐடியா வருதோ?