சென்னையில் அந்நியன் மழை!

Must read

11234809_560952394055103_8593369868832084704_n

 

சென்னை: தொடர் மழைக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சூரியன் தலைகாட்டியது.  இடையிடையே மழை பெய்ததாலும் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆகவே, “சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது” என்று நாமும் வேறு பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால்  கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. பெரும் இடியுடன் கனமழை பெய்கிறது. இதனால் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்டி திடீர் திடீரென கிளைமேட் தனது மூடை மாற்றிக்கொள்வதால், மக்கள் குழப்பத்தல் உள்ளனர். இதை வெளிப்படுத்தும்படியாக பல கிராபிக்ஸ் படங்கள் சமூகவலைதளங்களில் உலவ ஆரம்பித்திருக்கின்றன.  அதில் ஒன்றுதான் அந்நியன் படத்தில் விக்ரம் நடிக்கும் காட்சியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்.

More articles

Latest article