நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார், ஓவியம் வரைவதிலும், பேச்சுக்கலையிலும் வல்லவர். நடிப்பிலிருந்து (அறிவிக்காமல்) ஓய்வு பெற்றுக்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக உரை நிகழ்த்திவருகிறார். அதோடு, புராண இதிகாச கதைகள் குறித்தும் பேசிவருகிறார். இது மாணவர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு, கல்லூரி மாணவர்கள் முன், எந்தவித குறிப்பும் வைத்துக்கொள்ளாமல், கம்பராமாயணம் குறித்து நீண்ட உரையாற்றினார். அதே போல கடந்த ஆண்டு ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்களில் மகாபாரதத்தை சுவையாக சொல்லி முடித்தார். இதுவும் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த மகாபாரத உரையின் டிவிடி திரையிடலும் நடந்தது. இந்த உரை, வரும் பொங்கல் பண்டிகை அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.