சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான “ரஜினி முருகன் திரைப்படமும் பெரும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் சிவகார்த்திகேயனின் சம்பளம் எகிறிவிட்டது.  அவர் தனக்கு நிர்ணயித்திருக்கும் சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பாளர்கள் அலறுகிறார்கள்.  சிவகார்த்திகேயனுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்து வந்த நடிகர் தனுஷ், “அவர் பெரிய சம்பளம் வாங்குகிறார். எனது தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறினார்.
அதே நேரம், “சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் வசூலைக் குவிக்கின்றன. அதற்கேற்ப சம்பளத்தை உயர்த்துவது என்ன தவறு என்ற குரல்களும் ஒலிக்காமல் இல்லை.
எதற்கு வீண் பிரச்சினை என்று, தனது நண்பர் ராஜாவை வைத்து தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிவிட்டார்  சிவகார்த்திகேயன். தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் “ரெமோ” படத்தில்தான் நடித்து வருகிறார். தொடர்ந்தும் இதே நிறுவன படங்களில்தான் நடிப்பாராம்!
ம்.. அந்நியன் மாதிரி மிரட்டுறார் சிவகார்த்திகேயன்!