சிறுமி உட்பட 6 பேர் விருதை திருப்பிக்கொடுத்தனர்!

Must read

அரவிநத்
அரவிநத்

ழுத்தாளர்கள் மீதான தாக்குதல், மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி வன்முறை என்று அசம்பாவிதங்கள் தொடர்வதால், இத்தகைய சம்பவங்கள தடுத்து நிறுத்தாத மத்திய பாஜக அரசுக்கு எதிராக எழுத்தாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக,  சாகித்திய அகடமி வருது வாங்கிய படைப்பாளிகள் பலர், தங்களது விருதை திருப்பித்  அளித்து வருகிறார்கள்.

ராஜஸ்தானைச் சேர்ந்த நந்து பரத்வாஜ்., கன்னட எழுத்தாளர் வீரபத்ரப்பா ஆகியோர் தங்களுக்கு அளிக்கபப்ட்ட விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த 17 வயதான இளம் எழுத்தாளர் ரியா விதாசாவும் தனக்கு தனக்கு அளிக்கப்பட்ட பால சாகித்ய விருதை சாகித்ய அகாடமியிடம் திருப்பி அளித்துள்ளார்.

இவர் தற்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். . முட்டுதீர்த்தஹள்ளி எனும் புனை பெயரில் எழுதும் ரியா விதாசாவின் “ஒன்டு சந்திரனா துன்டு’ எனும் கட்டுரைத் தொகுப்புக்கு 2011ம் ஆண்டில் பால சாகித்ய விருது வழங்கப்பட்டது.

இதுவரை சாகித்ய அகடமி விருதுபெற்றவர்களில் ஆறு பேர் விருதை திருப்பி அளித்துள்ளனர்.

“சாகித்ய அகடமி விருது பெற்ற மூத்தவர்கள் பலர் விருதை திருப்பி அளிக்க மனமில்லாமல் இருக்கும் நிலையில், இந்த சிறுமியின் உணர்வு பிரமிக்க வைக்கிறது” என்று எழுத்தாளர் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.

சாகித்ய அகாடமி பொறுப்பி்ல இருந்து கன்னடஎழுத்தாளர் அரவிந்த் ஏற்கெனவே விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article