பிரபலமானவர்களை.. அவர்களின் நடவடிக்கைளில் எவற்றை.. நமது சமுதாயம் பார்க்கிறது என்பது குறித்து எழுதுகிறார் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன்.
a
மீபத்தில் தூத்துக்குடி MP சசிகலா புஷ்பா அவர்கள் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தொலைபேசி உரையாடல் வாட்சாப்பில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.
அதற்க்கு முன், திருப்பூர் MP, சத்தியபாமா தனது கணவருடன் சண்டையிட்ட உரையாடலும் அதிகமாகப் பகிரப்பட்டது.
இவர்கள் மட்டுமல்ல, நேருவையும் காந்தியையுமே இது விட்டு வைக்கவில்லை.
எப்பொழுது நேருவை பற்றிய பேச்சு வரும்போதும், அவரது விமர்சகர்கள், அவர் மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுடன் புகைபிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் படத்தையும் வெளியிடாமல் இருக்க மாட்டார்கள்.
அதே போல் காந்தியைப் பற்றிய விவாதத்தின் பொது அவர் பெண்களுடன் இருக்கும் படங்களையும் ஒரு பெண்ணுடன் நாட்டியமாடும் படத்தையும் (அது அனைத்தும் ஃபேக் படங்கள் என்பது வேறு விஷயம்) வெளியிடுவார்கள்.
லலித் மோடி முதல் இன்றைய விஜய் மல்லையா வரை யாரை விமர்சிக்க வேண்டுமென்றாலும், அவர்கள் அடுத்த பாலினருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுடன் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஒரு கலாச்சாரமாகவே உருவாகி வருகிறது.
முதலில் இவர்களது தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் உரிமை நமக்குள்ளதா?
உதாரணத்திற்க்கு நேருவை எடுத்துக்கொள்வோம். அவருக்கும் நமக்குமான உறவு என்பது ஒரு பிரதமருக்கும் குடிமகனுக்குமான உறவு மட்டுமே.
அவரது குடும்ப உறுப்பினராய் நாம் இருந்தால் மட்டுமே அவருக்கும் எட்வினா மவுன்ட்பாட்டனுக்குமான உறவை விமர்சிக்கும், கேள்வி கேட்கும் தகுதி நமக்கு வரும்.
அல்லது, அந்த உறவில் பாலியல் வன்கொடுமை இருந்தாலோ, அந்த உறவை நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உபயோகப்படுத்தி இருந்தாலோ அதை கேள்வி எழுப்பும் உரிமை நமக்குண்டு.
c
இதெதுவுமே இல்லாமல் அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கு நாம் அளிக்கும் அதீதமான முக்கியத்துவத்திற்கு காரணம் என்ன?
மூடி வைக்கப்பட்ட கலாச்சாரத்தில் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வக்கிரத்தின் இன்னொரு வெளிப்பாடே இதற்க்குக் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் என்று நினைக்கிறேன். மேலும் இந்நாட்டில் நிலவி வரும் பாலியல் வறட்சி, இது போன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அங்கு தன்னை பொருத்திப் பார்த்து ரகசியமாய் குதூகலமடைந்து கொள்ளும் மனநிலையை தொற்றுவதிருப்பதும் இது போன்ற விஷயங்கள் அதிக கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பொதுவாழ்க்கையில இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்கையை விட்டுவிட்டு அவர்களது அரசியலை மட்டும் விமர்சிக்கும் முதிர்ச்சி, என்று நம் மக்களுக்கு வயப்படும்?