சிறப்புக்கட்டுரை:  கண்ணன் வருவான்! – சுந்தரேஸ்வரர்

Must read

1

அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுத்த  உபதேசங்கள்தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை! அந்த கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறநந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி கூடுதல் முக்கியத்துவம் பெருவது இயல்புதானே!

எப்படி கொண்டாடுவது?

காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படியுங்கள். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டுமுறை ஜெபியுங்கள்.   பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம்எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேளுங்கள்.  இதனால் பகவான் கிருஷ்ணரின்  அருள் நமக்கு கிட்டும்.

கிருஷ்ணர், நள்ளிரவில்  பிறந்தார் என்பதால் மாலை நேரத்திலதான்   பூஜைகள் செய்ய வேண்டும். பொழுது சாயும் நேரம், கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்குஏற்றுங்கள். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்கரியுங்கள் . தேங்காய்,பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை,முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமைபொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை,பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு  அளியுங்கள்.  கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டும் செய்யலாம்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன்ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தப்படும் உறியடி, வழுக்கு மரம்ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழுங்கள்.

உங்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் கண்ணன் வருவான்!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்!

 

 

 

More articles

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article