finland

ஹார்வர்ட் பேராசிரியரான ஹோவர்ட் கார்ட்னர் என்பவர் ஒரு முறை குழந்தைகளுக்கான கல்வி பற்றி அமெரிக்கர்களுக்கு அறிவுருத்துகையில் “பின்லாந்து நாட்டு கல்வி முறையை நாம் பின்பற்ற வேண்டும், ஏனெனில் நாம் அவர்கள் செய்வதற்கு எதிர்மறையாக செய்கிறோம், மேலும் அவை எந்தப் பயனையும் குழந்தைகளுக்கு அளிக்கவில்லை” என்றார்.
அவர் கொடுத்த அறிவுரையைக் கேட்டு தனது ஏழு வயது மகனை பின்லான்டில் உள்ள ஜொஎன்சு என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் டாயில் சேர்த்தார். பள்ளியில் சேர்த்த ஐந்து மாதங்களில், தன் மகன் கல்வி கற்கும் முறையில் ஒரு மாற்றத்தை கண்டார். தானும் தன் மனைவியும் எந்தவொரு அழுத்தமும் போராட்டமும் இல்லாத ஒரு கல்வி முறையை கண்டனர்.
பின்லான்டில், குழந்தைகள் ஏழு வயது வரை பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க தேவையில்லை. ஏழு வயது வரை, நாடகம் , பாடல்கள், விளையாட்டுகள், உரையாடல் போன்றவற்றின் மூலம் வீட்டிலேயே பயிலலாம். பள்ளியில் செலவிடும் நேரம் குறைவு தான், அதே போல் வீட்டில் வந்து செய்யும் வீட்டுப்பாடமும் குறைவே.
வகுப்பில், குழந்தைகள் அவ்வப்போது விளையாடுவார்கள், கொஞ்ச நேரம் உறங்குவார்கள், மற்ற குழந்தைகளுடன் பேசி சிரித்து மகிழ்வார்கள். ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கூறுவது “குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விட வேண்டும்; அவர்கள் விளையாடுவதைத் தான் அதிகம் விரும்புவார்கள்; அவர்கள் அதிகம் கற்றுக்கொள்வதும் விளையாட்டின் மூலம்தான்” என்கிறார்கள்.
பின்லான்டில், மருத்துவர்களுக்கு அடுத்த படியாக அதிகம் போற்றப்படும் தொழில் ஆசிரியர் தொழில்தான். அத்தகைய ஆசிரியர்கள் ஒரு முதுகலை பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .
தேசிய பொது அளவில், பின்லான்டு மிகவும் தகுதி வாய்ந்த மாணவர்களையே சமுதாயத்திற்கு கொடுக்கின்றது.