உதய நிதி சிம்பு புதிதுமூன்று வருட போராட்டத்துக்குப் பிறகு வெளியானது “சிம்பு”வின் வாலு திரைப்படம்.   வெளியாகும் சமயம், அதை தடுப்பதற்காக ஒரு டீம் முயற்சிப்பதாக சிம்புவின் அப்பா டி. ஆர். வெளிப்படையாகவே புகார் கூறினார்.

“வாலு ரிலீசாகும் அதே சமயத்தில் ஆர்யாவின் வி.எஸ். ஓ.பியும் வெளியாக நாள் குறிக்கப்பட்டது. வி.எஸ்.ஓ.பியை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வதாக இருந்நதது. ஆகவே, தான் வெளியிடும் படத்துக்கு சிக்கல் வரக்கூடாது என்பதற்காக வாலு ரிலீஸை முடக்குகிறார் உதயநிதி” என்று பேசப்பட்டது.

அவரது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு ரசிகர்கள் சிலர், இதை வெளிப்படையாகவே சொல்லி விமர்சித்தார்கள். உதயநிதியோ, “ நான் ஏன்யா சிம்பு படத்தை தடுக்கப்போறேன்” என்று டென்ஷனாக பதில் அளித்தார்.

(அப்புறம் வி.எஸ்.ஓ.பி. படத்தை ஆர்யாவே சொந்தமாக ரிலீஸ் செய்தார் என்பது வேறு விசயம்!)

கொஞ்ச நாள் அமைதியாக இரு தரப்பும் இப்போது மீண்டும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த “இது நம்ம ஆளு” திரைப்படம், சிம்பு செய்த வம்புகளால் தடைபட்டு நிற்கும் படங்களில் ஒன்று. சமீபத்தில் ஞானோதயம் பெற்ற சிம்பு, அந்த படத்தின் மீதிக் காட்சிகளை முடித்து ரிலீஸ் செய்ய நினைத்தார். ஆகவே, அதில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்காக நயன்தாராவை அணுகினார். அவரோ, “ ஏற்கெனவே நான் கொடுத்த கால்ஷீட்டை எல்லாம் வீணடித்துவிட்டீர்கள். இனி அந்த படத்தில் நடிக்க முடியாது” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.

ஆகவே படத்தை வெளியிட முடியாத நிலை.

“ஒரு காலத்தில் நயன்தாரா நெருக்கமாக இருந்தவர்களுள் ஒருவர் சிம்பு. இப்போது இருவருக்கும் டேர்ம் சரியில்லை. தற்போது நயன் நெருக்கமாக பழகும் நடிகர்களில் முக்கியமானவர் உதயநிதி. அவர்தான் நயனை தூண்டிவிட்டு கால்ஷீட் தராதே என்கிறார்” என்று சிலர் கிளப்பிவிட…

‘டென்ஷன் ஆகிவிட்டார் சிம்பு. ஆகவே, தனது நட்பு வட்டாரத்தில், உதயநிதி்க்கு கடுமையாக அர்ச்சனை செய்கிறாராம். அது மட்டுமல்ல… உதயநிதிக்கு எதிராக, அதிமுகவில் சேர்ந்துவிடலாமா என்றும் ஆலோசனை செய்துவருகிறாராம்!

கட்சியசில சேர்றதுக்கு காரணத்தை பாரு!