பீப் சர்ச்சை: 4 :

சிம்புவுடன் தனுஷ்
சிம்புவுடன் தனுஷ்

அருவெறுப்பான பீப் பாடலை பாடியதோடு, “அதுல என்ன தப்பு… இது மாதிரி இன்னும் 150 பாடல்கள் இருக்கு..” என்றும் சொல்லி, ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார் சிம்பு. இந்த நேரத்தில் அவர் மீது சாஃப்ட் கார்னருடன் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வாட்ஸ்அப்பில் உலவ விட்டிருக்கும் கருத்து இது.

“அனிருத் அந்த பாடலுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என கூறுவார் என நான் முன்னமே எதிர்பார்த்தேன்…. சினிமா துறையில் ஒரு பெரிய கில்லாடித்தனம் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. சினிமா துரையின் முடிசூடா மன்னனாக இருக்க வேண்டும் என தனுஷ் முயற்சி செய்கிறார். அதற்கு பக்கபலமாக இருக்கும் அனைவரையும் வைத்து படமெடுப்பது, அவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுப்பது என அனைத்தையும் செய்துவருகிறார். தன்னை விட சீனியர்களிடம் மோதுவதில்லை, தனக்கு பின் அல்லது தன்னுடன் நடிக்க வந்தவர்களில் யாரும் தன்னை விட முந்திவிடக்கூடாது என ஒரு முடிவுடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் மூலம் வரும்காலங்களில் தமிழ் சினிமா உலகம் தன்னை மட்டுமே நம்பியிருக்கும்படி மாற்றியமைக்கலாம் என்ற எண்ணம் அதற்கு துணையாக அவரது மனைவி மற்றும் மாமனார்…… இதன் ஒரு படியாகத்தான் தனக்கு எப்படியும் போட்டியாக வந்துவிடுவார் என நினைக்கு சிம்புவை படாதபாடு படுத்துவது. சிம்புவிற்கு அனைத்து துறைகளிலும் அனுபவம் உள்ளது ஏதாவது ஒரு மாயம் செய்து இரண்டு படங்களை ஹிட் கொடுத்து விட்டால் பின் தனது திட்டத்தை மீண்டும் ஒன்னிலிருந்து துவங்கவேண்டும் என்ற எண்ணம் தனுதுக்கு இருப்பதால் அவரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்.

இதற்கு கருவிகள் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்…. அதன் ஒருபகுதியாக வாலு படத்திற்கு திரைமறைவாக நின்று பல்வேறு பிரச்சன்னைகள் கொடுத்தார். ஆனாலும் சிம்பு மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்ளும் வகையில் அனிருத்துடன் சேர்ந்து பல்வேறு வேலைகளை செய்து வந்ததுதான் தவறு. பீப் பாடல் என கூறி தற்போது சிம்புவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சனையில் இருந்து அனிருத் எப்படியும் தப்பிக்கொள்வார் ஆனால் பலிகெடா சிம்பு சிக்கி சீனாகி சீரழிந்து விடுவார்.

திரைத்துறையில் இப்படி தான் மட்டுமே கோலேச்ச வேண்டும் என்று நினைப்பது இன்றைய பழக்கம் இல்லை எம்.ஜி.ஆர் காலம் முதல் தொடர்ந்து வருவதுதான்…. ஆனால் அன்று இருந்த நிலை வேறு இன்று இருந்த நிலை வேறு ஒருவர் கையில் சினிமா துறை சென்றுவிட்டால் பவேறு வக்கிரங்களை மக்கள் சந்திக்க வேண்டி வரும்…. (பீப் பாடல்போல) இதை சிம்பு புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தால் சிம்புவிற்கு நல்லது. சிம்பு இன்னும் பழையபடி விவரமின்றி இருந்தால் அவரது அப்பா கஷ்டப்பட்டது அனைத்தும் வீணாகிவிடும். இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏன்னென்றால் அனிருத் மீது நடவடிக்கை எடுத்தால் அவரது உறவினரும் காட்பாதருமான ரஜினியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவே அவர் மீது நடவடிக்கை இருக்காது. பாவம் சிம்புவின் நிலை தான் பரிதாபம்….. அதற்காக சிம்பு செய்தது சரி என கூறவில்லை அவர் இத்தனை பட்டும் திருந்தவில்லை என்பதே அவரது இன்றைய நிலைக்கு காரணம். எது எப்படி இருந்தாலும் ஒரு தனிப்பட்ட மனிதனை முடக்க வேண்டும் என நினைத்து ஒரு சமூகத்தையே இழிவு படுத்தும் இந்த நிலை நீடித்தால் இனி இந்த தமிழகத்தை யாரும் காப்பாற்ற முடியாது என்பதே நிஜம்.

அதே சமயம் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள ரஜினியின் உறவினர் என்பதற்காக மகளிர் அமைப்புகள் இதற்கு கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு விட்டுவிட்டால் இதைவிட கேவலம் எதுவும் இல்லை. மகளிர் அமைப்புகள் தனி ஓரு பெண்ணுக்கு வீதியில் இறங்கி போராடும்போது ஒட்டுமொத்த பெண் சமூகத்தை இழிவுபடுத்தும் இந்த பாடலுக்கும் அது உருவாக காரமாக இருந்தவர்களுக்கும் எதிராக வீதிக்கு வரவில்லை என்றால் அது பெண்கள் அமைப்புகள் மீது உள்ள நம்பிக்கையை கெடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.”

– இப்படி கூறுகிறது அந்த வாட்ஸ்அப் கருத்து