கதாநாயகி கல்பனா
கதாநாயகி கல்பனா

ஐதராபாத்:
குணச்சித்ர மற்றும் காமெடி நடிகை கல்பனா ஐதராபாத்தில் இன்று காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் பி&லிங்வால் என்ற திரைப்படத்திற்கான சூட்டிங் ஐதரபாத்தில் நடக்கிறது. இதில நடிப்பதற்காக நேற்று மதியம் கல்பனா அங்கு சென்றார். அங்குள்ள ஓட்டலில் அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கையில் மூச்சு பேச்சின்றி கிடந்தார். உடனடியாக அவரை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். தகவலறிந்து அவரது சகோதரியும் நடிகையுமான ஊர்வசி ஐதராபாத் விரைந்துள்ளார். அதன் பிறகு கல்பனா உடல் கேரளா கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து நடிகை லலிதா கூறுகையில்,‘‘ கடந்த சில ஆண்டுகளாகவே கல்பனா இதய வால்வு பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கொச்சினில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கல்பனாவுக்கு சமீபத்தில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது’’ என்றார்.
1983ம் ஆண்டு மஞ்சு என்ற மலையாள படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழில் சின்ன வீடு படத்தில் நடித்தார். மலையாளம் மற்றும் தமிழில் 300 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். 1995ம் ஆண்டு சதிலீலாவதி, 1996ல் காலி வீடு போன்ற படங்களை நடித்துள்ளார். 2012ம் ஆண்டு இவரது கணனர் அனிலை விவாகரத்து செய்தார். இவருக்கு ஸ்ரீமாயி என்ற 16 வயது மகள் உள்ளார்.
2012ம் ஆண்டு தனிச்சாலா நிஜன் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.