index
ரசியல் இல்லாத இடமே இல்லை” என்பார்கள். அதுவும் சாதி மோதல்களின் பின்னணியில் அரசியல் இல்லாமல் இருக்காது. ஆனால், அரசியல்வாதியான வைகோ, சாதி மோதலைத் தடுத்திருக்கிறார்.
சிவகாசி – சித்துராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், ம.தி.மு.க. பிரமுகர். அந்த பகுதியில் டீ கடை வைத்திருக்கிறார். எந்த ஒரு பொதுப் பிரச்சினைக்கும் முதல் ஆளாக நிற்பார். தவறு என்றால் தயங்காமல் தட்டிக்கேட்பார்.
அவரது கடைக்கு அருகில் கடந்த சில நாட்களாகவே ஒரு கும்பல் நின்றுகொண்டு, அந்தப்பக்கம் வரம் பெண்களை கிண்டல் செய்துகொண்டிருந்தது. எல்லோரும் விடலை பையன்கள்தான். ஆனால், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அவர்கள், அதைச் சொல்லியே அடாவடி செய்து வந்தார்கள்.
அவர்களை கோவிந்தராஜ் தட்டிக்கேட்டார். அடுத்த சில நாட்களில்.. அதாவது கடந்த 29.12.15 அன்று இரவு, கோவிந்தராஜ் சில ரவுடிகளால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார்.
இது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. “குற்றவாளிகளை உடனை கைது செய்ய வேண்டும்” என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, முழக்கமிட்டனர்.   குறிப்பிட்ட அந்த கொலைகார கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தாக்கப்படுமோ என்ற பதட்டமும் நிலவியது.
இந்த பதட்டமான சூழலில்.. மறுநாள் 30ம் தேதி, கோவிந்தராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
அப்போது அங்கே ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். வைகோவைக் கண்டதும், அவர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். “குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று ஆவேசமாக முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார்கள். வைகோ அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, கொலைக் குற்றவாளியான ராமேஷ் பாண்டியன் என்பவரின் சித்தி முத்துலட்சுமி கூட்டத்திலிருந்து ஓடிவந்து வைகோவை கட்டிப் பிடித்துக் கதற ஆரம்பித்துவிட்டார்.
அந்தப் பெண்மணி வைகோவை நோக்கி ஓடிவரும்போதே, அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றார்கள். ஆனால் வைகோ, அவரை விடுங்கள் என்றார்.
வைகோவிடம் அந்த பெண்மணி, “அய்யா… நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.. என்னைக் காப்பாத்துங்க.. கொலை பண்ண ரமேசோட சித்தி அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக என் வீட்டை சிலர் திட்டம் போடுறாங்க.. “ என்று கதறினார்.
கூட்டமோ கொந்தளிப்பான நிலையில் இருந்தது. கூட்டத்தினரை அமைதியாக சில நிமிடம் இருக்கும்படி கூறிவிட்டு வைகோ பேச ஆரம்பித்தார்:
“குற்றவாளிதான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, கொலையில் சம்மந்தம் இல்லாத அவரது தாயாரோ, சித்தியோ தண்டிக்கப்படக் கூடாது. இது இரு சமுதாயங்களுக்கு இடையில் நடக்கும் மோதல் அல்ல. தனிப்பட்ட சில ரவுடிகளின் செயல். அந்த ரவுடிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். இதை சாதி மோதலாக மாற்ற முயற்சிக்கும் சமூக விரோத சக்திகளிடம் இரு சமூக மக்களும் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பேசி கொந்தளிப்பில் இருந்த கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார்.
பிறகு, அங்கு முகாமிட்டிருந்த மாவட்ட கால்வதுறை அதிகாரி அரவிந்தனுக்கு தகவல் சொல்லி, காவல்துறை வாகனத்தை வரவழைத்து, அதில் முத்துலட்சுமியை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தார் வைகோ.
“இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள், குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளமாகச் சொல்லி அலைபவர்கள். ஆகவே அவர்களது உறவினர்கள் தாக்கப்பட்டிருந்தால், பெரும் சாதி மோதலாக உருவாகியிருக்கும். ஆனால் வைகோ, மிக திறமையாக சூழலை கையாண்டு, சாதி மோதல் ஏற்பட இருந்ததை தடுத்தார்” என்று நெகிழ்ந்து பாராட்டுகிறார்கள் தூத்துக்குடி மக்கள்.
“கொல்லப்பட்ட கோவிந்தராஜ், வைகோவின் உறவினர்தான். ஆனால், குறிப்பிட்ட சம்பவம் சாதி ரீதியான மோதலே அல்ல என்பதை.. உணர்ச்சிவசப்பட்டிருந்த மக்களுக்கு எடுத்துக்கூறிய சுமுகமான சூழலை ஏற்படுத்திய வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..” என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
எப்படியோ.. பெரும்பாலான அரசியல்வாதிகள் சாதியை வைத்து அரசியல் பிழைக்கும் சூழலில், வைகோவின் செயல்பாடு பாராட்டத்தக்கது!
கொந்தளிப்பில் இருந்த மக்களை சமாதானப்படுத்த வைகோ பேசிய வீடியோ லிங்க்:
https://www.youtube.com/watch?v=TzGd2fJlTdk&feature=youtu.be