0

சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை  23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார்.

‘மன்மீத்சிங்எதிர் அரியானா மாநிலம்’ என்ற வழக்கில்( WP 26734/2014 நாள் 23.02.2015)தீர்ப்பளித்த நீதியரசர்அவர்கள் காவல்துறைக்குச் சிலமுக்கியமான வழிகாட்டுதல்களை ஆணையாகப் பிறப்பித்திருக்கிறார்.

மன்மீத்சிங்என்பவர் தனதுமனைவியைப் பிரித்த பெண்ணின் பெற்றோர் அவரைப் படுகொலை செய்துவிட்டனர் என்று  வழக்கு தொடுத்தார்.

அவ்வழக்கில்பின்வரும் உத்தரவை நீதியரசர்கே.கண்ணன் பிறப்பித்திருக்கிறார்:
1. சாதி ஆணவக் கொலைகள் நடக்கும்மாவட்டங்களில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை ஆதரிக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் ஊரில் பதற்றம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்தவும்- ஒவ்வோர் ஊரிலும் ‘மக்களின் நண்பர்கள் ‘ என்னும் பெயரில் அங்கிருக்கும் முற்போக்காளர்களைக்கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
2. ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சாதி ஆணவக் கொலை குறித்த அச்சுறுத்தல்க
ள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கெனத் தனிப் பிரிவுகள் ஏற்படுத்தவேண்டும்.
3. கலப்பு மணம்செய்துகொண்ட தம்பதிகளில் ஆணையோ பெண்ணையோ அவர்களின் ஒப்புதலின்றிஅவர்களின்பெற்றோருடன் அனுப்பக்கூடாது.
4. சாதி ஆணவக் கொலை வழக்கைக் காவல்துறை உயரதிகா
ரியின் நேரடி மேற்பார்வையில் மாவட்டக் கண்காணிப்
பாளர் தகுதியில் உள்ளவர்தான் உசாவ (விசாரிக்க)வேண்டும்.
5.பழமையான மரபுகள் கலப்பு மணத்துக்குத் தடையாக இருக்குமெனில்,
தனிமனிதரின் சுதந்திரத்துக்குத்தான் காவல்துறை முன்னுரிமை அளிக்கவேண்டும்.
6. திருமணப் பதிவுஅலுவலகங்களில் பதிவின்போது தம்பதியினரின் பெற்றோர் உடன்வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாது .

இவற்றை அவர் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

ஊடகங்கள்சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியிரு
க்கும்நீதியரசர்கே.கண்ணன் தமிழர்; கடலூ ரைச் சேர்ந்தவர்;நேரdமையான நீதிபதி எனப்
போற்றப்படுபவர். ஊடகங்களில் வெளியிடப்படும் ‘மண மக்கள் தேவை’ விளம்பரங்கள்  சாதியப் பெருமிதத்தை வெளிப்படுத்துவனவாக இருப்பதாகவும், வருமானத்தைக் கருதி அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள்தவிர்க்கவேண்டும் எனவும் அவர் தமதுதீர்ப்பில்குறிப்பிட்டுள்ளார்.