1444032771-4365

மெரிக்காவில் உள்ள பிராண்டன் – பிரிட்டானி தம்பதியருக்கு கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் மண்டை ஓடு இல்லாமல் பாதி தலையுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு பெற்றோர்கள் ஜெக்சன் ஸ்ட்ராங் என்று பெயர் சூட்டினர்.

இந்த குழந்தையின் தாய் பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது Anencephaly என்ற மண்டையோட்டு குறைபாட்டு நோயுடன் குழந்தை இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனால், 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், குழந்தையை பெற்றுக்கொள்வது என்பதில் பிராண்டன் – பிரிட்டானி தம்பதி உறுதியாக இருந்தனர்.

சுகப்பிரசவம் ஆனது. .ஆனால் பாதி மண்டை மட்டும்தான் இல்லை.  மருத்துவர்கள், “இந்த குழந்தைக்கு வளர்ந்த பிறகும், தனக்கு பசிப்பதை சொல்லத்தெரியாது. சராசரி மனிதனைப்போல் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும் முடியாது” என்று கூறிவிட்டனர்.

ஆனால், பெற்றோர் கவலைப்படவில்லை. “நாங்கள் நன்றாக பார்த்துக்கொள்வோம்” என்கிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம், குழந்தை ஜெக்ஸன் ஸ்டாங்குக்கு ஒரு வயது நிறைவடைந்தது. அதை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள் பிராண்டன் – பிரிட்டானி தம்பதி.

1444032819-4841“குழந்தையின் நிலை ஆரம்பத்தில் எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவன் தற்போது மிக திடமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறான் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

ஜெக்சன் ஸ்ட்ராங் நலமுடன் வாழ வாழ்த்ததுவோம்!

குழநதை ஜாக்சனுக்காக தனி பேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/WeAreJaxonStrong) துவங்கினார்கள். இப்போது அந்த பக்கத்தை லட்சக்கணக்கணோர் லைக் செய்திருக்கிறார்கள். “ஜாக்சன் ஸ்ட்ராங் எங்கள் குழந்தை” என்று பேஸ்புக் பதிவர்கள் கொண்டாடுகிறார்கள். மிகக் குறைந்த வயதில் பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து, லட்சக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ள சாதனையை அடைந்திருக்கிறான் ஜாக்சன் ஸ்ட்ராங்!

அதோடு,பலர் நிதி உதவியும் செய்து வருகின்றனர். இதுவரை 1 லட்சம் டாலருக்கும் மேல் நிதி உதவி கிடைத்துள்ளது.

இந்த நிதியால் அதி நவீன சிகிச்சை மூலமாக தங்களின் குழந்தையை காப்பற்றி இயல்பான நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று  பிராண்டன் – பிரிட்டானி தம்பதி கூறியுள்ளனர்.

ஜாக்சன் ஸ்ட்ராங், ஸ்ட்ராங்காக பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!