1
ங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படம், வெளிவருவதற்கு முன்பே ஒரு சாதனை படைத்திருக்கிறது. இந்தப்படம்  330 கோடி ரூபாய்க்கு  இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.  இதற்கு முன்  அமீர் கான் நடித்த பிகே  என்ற இந்தி படம்  300  கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.  இப்போது அந்த சாதனையை  சாதனையை 2.0 முறியடித்துள்ளது என்கிறார்கள்.
ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படம், தற்போது ரஜினி நடிக்கும் லிங்காவுக்கு அடுத்ததாக வெளியாக உள்ளது.  இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம்.  இதற்கு ஏன் “எந்திரன் – 2” என்று பெயர் வைக்கவில்லை என்பதற்கான காரணம் இப்போது வெளியாகிவுள்ளது.   எந்திரன் படத்தை தயாரித்த  நிறுவனம், மறுபடி அதே பெயரை பயன்படுத்த அனுமதிக்கவில்லையாம். அதனால்தான் புது தலைப்பு.
அளிக்க மறுத்து விட்டதாலேயே இந்த படத்திற்கு 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.
பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு கடைசி நேரத்தில் பலவித  சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியாமல் போய், தயாரிப்பாளர்கள் பெரும் கடனில் சிக்கிவிடுகின்றனர். இந்த நிலை 2.0 படத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே . 330 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.