சவுதி: இப்படியும் சில மூடர்கள்!!

Must read


x

வுதி அரேபியாவில் ஒட்டகத்திற்கு முத்தமிட்ட மருமகளை விவாகரத்து செய்யுமாறு தனது மகனுக்கு மாமனார் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில், சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் ஒட்டகத்தை தழுவி முத்தமிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த மாமனார், மத மற்றும் சமூக பாரம்பரியத்தை தனது மருமகள் மீறி விட்டதாக கூறி விவாகரத்து செய்யுமாறு தனது மகனிடம் கூறியுள்ளார்.

ஆனால், ஒட்டகம் குட்டி ஈன்றதை பார்த்த மருமகள் ஆசையோடு அதனை முத்தமிட்டுள்ளார், மேலும் தனக்கு குழந்தை பிறக்காத காரணத்தால் இவ்வாறு சதிச்செயலலில் மாமனார் குடும்பத்தினர் ஈடுபடுகின்றனர் என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நடந்து முடிந்த பிரச்சனையின் இறுதியில், கணவர் தனது மனைவியோடு சென்று மாமியார் வீட்டில் வசித்து வருகிறார்.

More articles

Latest article