4

சென்னை:

லங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே மூன்றாவது யுத்தம் நடைபெற்றது. அந்த போரில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்த போரில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் பலியானதாகவும் ஆதாரபூர்வமான குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கையை, இன்று பிற்பகல் 3 மணிக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல்-உசேன்‌ தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில், “இலங்கை புரிந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை” என்ற தீர்மானம் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, “2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்கிற கருத்தை அமெரிக்கா வெளிப்படுத்தி உள்ளது. அப்படி இலங்கை அரசே விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவராது.

ஆகவே இந்திய பேரரது, தனது ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் முடிவை மாற்ற வேண்டும். சர்வதேச விசாரணை நடக்க இந்திய பேரரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது இந்திய பேரரசின் கடமை ஆகும்” என்று தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தை தேமுதிக, திமுக, காங்கிஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். இதையடுத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

கடந்தகாலங்களிலும் இலங்கைக்கு ஆதரவான நிலைபாட்டையே இந்திய அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவதால் எப்படி எந்த ஒரு தீர்வும் கிடைப்பதில்லையோ, அதோ போல சட்டமன்றத் தீர்மானங்களிலாலும் பயனில்லை” என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பயனில்லை..

தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் அதே நேரத்தில், “இந்தத் தீர்மானத்தால் பயன் ஏதும் விளையப்போவதில்லை” என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

“ஏற்கெனவே இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதம் ரணில் விக்கிரமசிங்கேவும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன.

பிறகு பத்திரிகையாளர்களிடையே பேசிய பிரதமர் மோடி, “கட்டமைப்பு, ரெயில்வே, எரிசக்தி, சமூக வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை, திறன் வளர்த்தல், அறிவியல்- தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி துறை ஆகியவற்றில் இந்தியாவின் சிறந்த கூட்டாளியாக இலங்கை விளங்குகிறத” என்று பேசினார்.

மேலும், “இரு நாடுகளும் ராணுவ ரீதியில் இணைந்து செயல்படும். இலங்கைக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடரும்” என்றும் பேசியிருக்கிறார்.  ஆகவே கடந்த காலத்தைப்போலவே இப்போதும்,  இலங்கை அரசுக்கு எதிரான நிலைபாட்டை இந்தியா  எடுக்காது.

பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதவதைப்போலத்தான் இந்த தீர்மானங்களும்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.