கொச்சியில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஸ்ருதி ஹாசன் அணிந்து வந்த சிண்ட்ரல்லா ஈவினிங் ஆடை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஊதா நிற சிண்ட்ரல்லா கவுனில், அழகிய பூ வேலைபாடுகளுடன் கூடிய அந்த ஆடை பலரையும் கவர்ந்துள்ளது. ஆடைக்கு ஏற்றவாறு அவரது சிகையலங்காரமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாங்க்ராமில் அவரது இந்த புகைப்படம் 2 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. அந்த ஆடையை ஜூட்டா மேரி என்பவர் வடிவமைத்ததாகவும் தனக்கு ஸ்டைல் செய்தவர் சஞ்சன் பத்ரா என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.