‘சமாதி அடைந்த’ சாமியார் 15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்தார்

Must read

Bihar: Self-styled godman
‘சமாதி அடைந்த’ சாமியார்
15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்தார்

பாட்னா
பீகாரில் பூமிக்கு அடியில் சமாதி அடைந்த சாமியார் ஒருவர்  15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பீகாரின் மெதேபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விகாஷ்குமார் கூறியதாவது:- தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிவந்த ஒருவர் அவருடைய பக்தர்களால் “பாபா”   என அழைக்கப்பட்டார். இவர்  கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பாட்காமா எனும் கிராமத்தில் அங்குள்ள மக்களை அழைத்து தான் பூமிக்கு அடியில் சமாதியாகப்போகிறேன். மீண்டும் உயிருடன் வருவேன் எனச் சொல்லி இருக்கிறார்.
இதற்காக 10 அடி நீளம், 10 அடி அகலத்துடன் 15 அடி ஆழத்தில் மிகப்பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. பின்னர், படுக்கையில் உட்கார்ந்த நிலையில் குழிக்குள் இறக்கி அதன் மேல் துணிகளைப் போட்டுத்  தரைமட்டம் வரை மூடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குழிக்குள் இறங்கிய அன்றே காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த காவல்துறையினர், அவரை குழியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவருடைய பக்தர்களும், அக்கிராம மக்களும் கடும் தெரிவித்ததால் அந்த முயற்சியை காவல்துரையினர் கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில் 15 நாட்கள் கழித்து குழியினை தோண்டியுள்ளனர்.அப்போது ‘சமாதி சாமியார் உயிருடன் வெளியில் வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதாகவும், இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச்சம்பவம் பிகாரில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 

More articles

Latest article