.:

சகாயம்

சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்..

இந்த நிலையில், பிஆர்பி. கிராணைட் நிறுவனத்தினர் மனநலம் பாதித்தவர்களை கிராணைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக நேற்று சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் புகார் கூறினார். இதையடுத்து சேவற்கொடியோன் குறிப்பிட்ட இடத்தை தோண்டும் பணி நடந்தது. ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் இனி தோண்ட முடியாது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, “காவல்துறை ஒத்துழைக்க மறுக்கிறது. நான் இங்கிருந்து சென்றால், நரபலி நடந்ததற்கான ஆதாரம் அழிக்கப்படும்” என்று கூறிய சகாயம் ஐ.ஏ.எஸ். இரவு அதே இடத்தில் தங்கினார்.

 

இரவு முழுதும் அங்கேயே சகாயம் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில், “சகாயம் ஒரு விளம்பரப்பிரியராக இருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன், தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை தெரிவித்தார்.

 

இதையடுத்து சமுகவலைதளங்களில் முருகன் ஐ.ஏ.எஸ்ஸுக்கு எதிராக கடுமையாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்த நிலையில் நாம் முருகன் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு பேசினோம்:

 

முருகந் ஐ.ஏ.எஸ்.

அநீதிக்கு எதிராக போராடும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை விளம்பரப்பியர் என்று இழிவு படுத்திவிட்டீர்கள்.. என்பதாக உங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே!

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது.  தவிர, தனது பணியை நேர்மையுடன் செய்வதோடு, வீண் விளம்பரம் இன்றியும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்பட வேண்டும்.

தரையில உக்காந்து இட்லி சாப்பிடறது, ஈன்னு பல் இளிச்சிகிட்டு டிவி காரன வரச்சொல்லி போஸ் கொடுக்கறது.. இதெல்லாம் தப்பு.

நைட் இவரு டயர்டா உக்காந்திருக்காரு.. அதையும் டிவியில போடறாங்க.. இவரு தூங்கினா பிணத்த நோண்டி எடுத்திருவாங்களாம்… இதெல்லாம் என்ன?

இவருக்கு கோர்ட் கொடுத்த வேலை என்ன, அதைவிட்டுட்டு ஏதேதோ செய்து விளம்பரம் தேடறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி செய்லபடமாட்டார்!

சகாயம் நிலையில் நீங்கள் பணியில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

 யெஸ்.. கோர்ட் கொடுத்திருக்கும் வேலை, கிராணைட் குவாரி தொடர்பான அத்துமீறல்களை ஆராய்வதுதான். இடையில் ஒருவர் வந்து, “அய்யா.. இங்கே நரபலி நடந்திருக்கிறது” என்று கூறினால் அவரிடம் புகார் வாங்கி அந்த மாவட்ட கலெக்டரிடம் கொடுப்பேன். அரசுக்கு இது குறித்து தெரிவிப்பேன். மற்றபடி நீதிமன்றம் கூறியிருக்கும் கிராணைட் முறைகேடு குறித்து தொடர்ந்து தீவிரமாக ஆராய்வேன். நான் என்றில்லை.. எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இப்படித்தான் செயல்படுவார். செயல்படவேண்டும்.

அரசியல்வாதி மாதிரி, “இது சரியில்ல அது சரியில்லை” என்பது, அங்கேய உட்கார்ந்துகொள்வது, பேண்ட் சர்ட்டோடு படுத்துக்கொண்டு போஸ் கொடுப்பது.. இதெல்லாம் எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் செய்யமாட்டார்.. செய்யக்கூடாது!

உங்கள் வாதம் சரி என்றே வைத்துக்கொள்வோம். அதே நேரம் சகாயம் மீது ஊழல் புகார் எதுவும் சொல்ல முடியாத, நேர்மையான சகாயத்துக்கு உங்களைப்போன்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தும் பலருக்கு உள்ளது…

அன்தகாலத்துல ஆசைத்தம்பி சொல்லியிருக்காரே… “ கையில் வாங்கி பையில் போட்டாதான் லஞ்சமா” அப்படின்னு! நிறைய பேரு பெரிய ஆளுன்னு நினைச்சு வந்து நிக்கிறான்… அப்போ இவங்க மாதிரி ஆளுங்க கைகாட்டினா போதுமே… அதுவும் பணம்தானே!.

 சகாயத்தின் நேர்மை மட்டுமல்ல அவரது எளிமையான செயல்பாடும் மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறதே…

பொறுங்கள்… நான் மதுரை போகும்போது சொன்னாங்க… ரயில்ல மதுரைக்கு வரும் சகாயம் விடியற்காலையில ரயிலை விட்டு இறங்கும்போது, அவருக்கு முன்னால யாரும் இறங்கிடக்கூடாதாம். அந்த கேரேஜ்ல இருக்கிற டி.டி.இ, சகாயம் கூட வர்ற ஆளுங்க எல்லாருமே மத்த பயணிகள்ட்ட, “சகாயம் ஐ.ஏ.எஸ் இறங்கட்டும்.. அப்புறம் மத்தவங்க இறங்குங்க.. இல்லேன்னா கோவிச்சுக்குவாரு”னு சொல்லுவாங்களாம்.

இதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்துல இருந்தது. ஆனா நான் உட்பட வேற ஐ.ஏ.எஸ் அதிகாரிங்க இப்படி சகாயம் மாதிரி நடந்துக்கலை..

சகாயம் ஒரு விளம்பரப்பிரியர் என்ற நீங்கள் கூறியதற்கு சமூகவலைதளங்களில் பலரும் உங்களை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார்களே..

இது போன்ற விமர்சனங்கள் பலவற்றை சந்தித்தவன் இதற்கு பயந்துகொண்டு சரியான விசயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது.

காவல்துறையும், நிர்வாகமும் உலகிலேயே சிறப்பாக இயங்குவது அமெரிக்காவில்தான். அதற்கடுத்து பிரான்ஸ். அந்த அமெரிக்காவிலேயே முழுமையாக சட்டம் ஒழுங்கை சரி செய்துவிட முடியவில்லை என்று ஒரு முறை நான் எழுதினேன். உடனே, “ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எழுதுறாய்” என்று என் மீது பலர் பாய்ந்தார்கள்.

அதே போ சசிபெருமாள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. அவரை காந்தியவாதி என்கிறார்கள். காந்தி எப்போது எந்த டவர் மீது ஏறி நின்று செத்துவிடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து நான் எழுதிய போதும் பலர் என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.

சமூகவலைதளங்களில் மேம்போக்காக பார்ப்பவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். ஒரு குறிப்பிட்ட துறையில் இருப்பவரின் நடவடிக்கை சரியா தவறா என்பது அதே துறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் ஐ.ஏ.எஸ். பற்றி, அவர்களது பணி பற்றி எதுவும் தெரியாதவர்கள் “சகாயம் சரி.. முருகன் தப்பு” என்றால் அதற்காக வருத்தப்பட முடியுமா?

அப்பாவிகள் நாப்பது பேர் திட்டினாலும், அறிவார்ந்த நாலுபேர் நம்ம கருத்தை புரிஞ்சிகிட்டா போதும்.

சரி… சகாயத்தின் நடவடிக்கைகள் குறித்து உங்களது ஒட்டுமொத்த விமர்சனம் என்ன?

லஞ்சம் வாங்குபவர்கள் மனநோயாளிகள் என்று பொருள்படும் கட்டுரை ஒன்றை கடந்த வாரம் எழுதினேன்.   அவர்களில் சிலரது விசித்திர குணத்தைப் பற்றியும் எழுதினேன்.   உத்திரபிரதேச மாநலத்தில பிரதாப் சிங் என்ற அதிகாரி. லஞ்ச ஊழலில் திளைத்து 74 பங்களாக்கள் வாங்கியிருக்கிறார். எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ரெண்டு மூணு பங்களா வாங்குவாங்களே ஒழிய.. இத்தனை பங்களாக்கள் யாரும் வாங்க மாட்டாங்க!

அதே போல லஞ்ச ஐ.ஏ.எஸ். தம்பதி 394 வங்கி கணக்குகள் துவங்கியிருக்காங்க…   கல்கத்தாவில் வருமான வரிதுறை அதிகாரி லஞ்சமாய் வாங்கிய 20 கோடியை வீட்டில் வைத்திருந்து சிக்கினார். ஆனால் அவரா அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில்தான் சென்று வந்தார். அவரது மகன், பேருந்தில்தான் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இவர்கள் எல்லாம் மனநோயாளிகள். அது மாதிரி, புகழ் உச்சிக்குப் போகணும்னு மெண்ட்டலி அஃபெக்ட் ஆகியிருக்கார் சகாயம்னு நினைக்கிறேன்.