கோவில்பட்டியில் வைகோ கைது

Must read

vaiko_2314514f
விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு தே.மு.தி.க. – மக்கள் நல கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.
கோவில்பட்டியில் நடந்து வரும் ரயில் மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுமாறு தூத்துக்கு மாவட்ட காவல்துறை எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வைகோவுக்கம் எஸ்.பி.க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வைகோ கைது செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாலையில் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.

More articles

Latest article