த்திரிகையாளர்களை நோக்கி காறித்துப்பியதால் ஏற்பட்ட சர்ச்சை, ஜெயலலிலதாவின் பேனரை கிழக்க உத்தரவிட்ட விவகாரத்தில் வழக்கு மற்றும் முன்ஜாமீன்.. இப்படி சர்ச்சைகளில் சிக்கிவந்தாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்க, பல கட்சிகளும் தலையால் தண்ணீர் குடிக்கின்றன.

ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் அடங்கிய மக்கள் நல கூட்டணியில் சேரும்படி விஜயகாந்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அக் கூட்டணியில் உள்ள தலைவர், விஜயகாந்தை தேடிப்போய் சந்தித்து கூட்டணியில் சேரும்படி கோரினர்.

அதே போல தி.மு.க. தலைவர் கருணாநிதியும், விஜயகாந்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் தி.மு.கவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில்கூட, “அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டும் ஊழல் சக்திகள். அவற்றை புறக்கணிக்க வேண்டும்” என்று விஜயகாந்த் பேசினார்.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதை ஒரு சிலர், “ராஜதந்திரம்” என்றாலும், பெரும்பாலோர் தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியைும் பார்த்து பரிதாபப்படும் நிலையை இந்த அழைப்பு ஏற்படுத்திவிட்டது.

இன்னொரு புறம், பாஜக கட்சி, விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தே வரும் தேர்தலை சந்திப்பது என்கிற உறுதியுடன் செயல்படுகிறது.

12434694_10153875887269048_22099967_n

 

“நான் யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இருப்பதாக பாஜக சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும்..” என்று வெளிப்படையாகவே பேசினார் விஜயகாந்த். ஆனாலும் அவருடன் தொடர்ந்து பாஜக முக்கியஸ்தர்கள் சந்தித்து கூட்டணியில் இணைய வற்புறுத்தி வருகிறார்கள்.

இன்று காலையில்ல்கூட விஜகாந்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்தார். இந்த நிலையில், இன்று மாலை திடீரென விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக இணைந்து போட்டியிட வேண்டும் என அழைப்புவிடுத்தோம் என்றார். ஆனால் இந்த சந்திப்பு குறித்து விஜயகாந்த் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

“என்ன விலை கொடுத்தேனும் விஜகாந்தை தங்கள் கூட்டணிக்கு இழுத்துவிட பாஜக முடிவு செய்துவிட்டது என்பது அதன் தொடர் நடவடிக்கைகளில் தெரிகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.