0
 
 
வாட்ஸ்அப் தகவல்:
“குமரி மாவட்டத்தின் கடற்கரை வாழ் மக்கள் மீன் பிடித்தொழிலை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அதிக படிப்பறிவும் கிடையாது. கூலி அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குவைத் நாட்டிற்கு ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அரபியிடம் நான்கு மாதங்கள்  வேலையும் செய்தனர்.
பிடிக்கும் மீன்களில் பாதி பங்கு சம்பளமாகத் தரப்படும் என்ற  ஒப்பந்தத்தின் அடிப்படையில்  இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால்  மீனவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பிடுங்கி வைத்துக்கொண்ட அரபிகள்,  2% ,5% மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கேட்டபோது, அரபிகள் மிரட்டி உள்ளனர். மேலும் “சிவில் ஐடி வாங்க வேண்டும்”  என்று  கூறி அரபி மொழியில் எழுதிய பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதில் இவர்கள் நான்கரை_லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பணி செய்ய வந்த்தாக எழுதி இருந்திருக்கிறார்கள். இது தெரியாமல் நமது மீனவர்கள் கையெழுத்திட்டு விட்டார்கள்.
அதுமட்டுமல்ல, “இந்த மீனவர்கள் 41/2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலைக்கு வரவில்லை” என அரபிகள் அந்நாட்டு காவல்துறையில் புகாரும் கொடுத்துவிட்டார்கள்.
இது குறித்து மீனவர்கள், நமது இந்தியன் எம்பசியில் புகார் செய்த பொழுது “வழக்கை முடிக்காமல் இந்தியா திரும்ப முடியாது” என்று கூறி,   இருபது  நாட்கள் தூதரகத்தில் தங்க வைத்தனர்.
அப்போது, “இங்கு_சும்மா_சாப்பிட_வந்தீர்களா”எனக் கேட்டு ஒரு பெண் அதிகாரி மீனவர்களை துரத்தியுள்ளார்.
இந்த வழக்குக்காக நமது மீனவர்கள் சிறையிலும் 13 நாட்கள் இருந்திருக்கிறார்கள்  பிறகு இவர்கள், குவைத்_குமரி_சங்கத்தை தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கிறார்கள். அதில் Allwin Jose என்ற நண்பரின் முயற்சியில் கடந்த 14ம் தேதி ஏசியா நெட் ஹல்ப் நியூசில் செய்தி வெளியானது.
இவர்களின் பரிதாப நிலையை  எப்படியாவது இது இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பலவித முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் ஒரு கட்டமே இப்பதிவு.
வேலையும் இழந்து வருமானமும் இன்றி உணவுக்கும் வழியின்றி அன்னிய நாட்டில் கைதிகளாக வாழ்கிறார்கள். நபர் ஒருவருக்கு  நான்கரை லட்சம் கொடுத்தால் மட்டுமே பாஸ்போர்ட் கைக்கு வரும். இவர்களுக்கு அரபி தெரியாததால் தங்கள் நிலையை அந்நாட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கூறவும் வழியில்லை.
கோர்ட்டில் பேச அரபி மொழி தெரியாது. இவர்கள் இந்தியர்கள் என்பதால் மொழிப்பெயர்க்க இந்தி தெரிந்தவர்களை அமர்த்துகின்றனர். ஆனால் இவர்களுக்கு இந்தியும் தெரியாது.
ஊரை இழந்து உறவை இழந்து தவிக்கும் உறவுகளை நாம் நினைத்தால் நம் நாட்டிற்கு அழைத்து வர முடியும்.
இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்.  அனைத்து மீடியாக்களையும் இதன் பக்கம் திருப்பினால்  அரசின் கவனம் இவர்கள் மீது படும்!”