நெல்லை:  
குற்றால அருவிகளில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
220px-CourtallamOldFalls
ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை குற்றால அருவிகளில் சீசன் களைகட்டும். தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த முறை ஜூன் முதல் வாரத்தில் அருவிகளில் அவ்வப்போது மட்டுமே தண்ணீர் கொட்டியது. இதனால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத்துவங்கி உள்ளது.   , அங்குள்ள பேரருவி, சிற்றருவி, ஜந்தருவி, பாலருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. ஆகவே பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.