கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவில் ‘பிக் பாஷ் லீக்’ 20:20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெணிகேட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ்  அணி வீரர் கிரிஸ் கெய்ல்ஸ்  விளையாடுகிறார். திங்கள்கிழமை டாஸ்மெனியாவில் நடந்த  ஒரு போட்டியில் கெய்ல்ஸ் 15 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். அப்போது அவரை பேட்டி எடுப்பதற்காக நெட்வொர்க் 10 டிவி பெண் நிருபர் மெல் மெக்லாலின் சென்று மைக்கை நீட்டினார். அப்போது பேசிய கெய்ல்ஸ்‘‘ நான் எப்படி இப்படி ரன் எடுத்தேன் என்பது குறித்து உங்களிடம் தான் நான் நேர்காணல் நடத்த வேண்டும். உனது கண்கள் அழகாக உள்ளது. நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு நாம் இருவரும் இணைந்து குடிப்போம். வெட்கப்படாதே பெண்ணே..’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். பேட்டியை முடிப்பதற்காக அந்த பெண் நிருபரும் ‘‘ நான் வெட்கப்படவில்லை’’ என்று கூறிவிட்டு முடித்தார்.
கெய்ல்ஸின் இந்த பேச்சு ஆபாசமானதாகும் என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இதற்கு பதிலளித்த கெய்ல்ஸ்‘‘ நான் மரியாதை குறைவாகவோ அல்லது வேறு ஏதேனும் அர்த்தத்துடனோ பேசவில்லை. நேரலையில் இல்லாத அந்த நிருபரிடம் ஜோக்குக்காக அப்படி கூறினேன். இதில் அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு   கேட்டுக் கொள்கிறேன். அவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தொடர்பு கொண்டேன் ஆனால் முடியவில்லை’’ என்றார்.
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு பல மட்டங்களில் ஏற்பாடு நடக்கிறது. குறிப்பாக இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்க முயற்சி நடக்கிறது.