கொத்தடிமைகளாக வாழ்ந்த கீழ்த் தஞ்சை விவசாயக் கூலிகளை பண்ணை முதலாளிகள் படுகொலை செய்தது கிறிஸ்துமஸ் தினத்தில்தான். ( 1968ம் ஆண்டு.)
இந்த சோகம் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய சில தகவல்கள்..

வெந்து தணிந்த கூலிகள்..
வெந்து தணிந்த கூலிகள்..

1.விவசாயக் கூலிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் கன்னடர்.

2.பண்ணை முதலாளிகள் துப்பாக்கிகள் கொண்ட கூலிப் படை வைத்து, விவசாயக் கூலிகளை அடிமைப் படுத்தி வந்தார்கள். அந்த கூலிப் படைக்கு ஜீப் வழங்கும் விழா நடந்த்து. அந்த விழாவில் கலந்துகொண்டு ஜீப் சாவியை, பண்ணை முதலாளிகள் சங்க தலைவர் கோபாலகிருஸ்ணனிடம் அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

3.பண்ணை முதலாளிகளின் கூலிப் படையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அன்றைய தி.மு.க. அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

4.தங்கள் உரிமைக்காக போராடிய விவசாயிகளை, “அவர்களுக்கு கம்யூனிச பேய் பிடித்திருக்கிறது” என்றார் மூதறிஞர் ராஜாஜி.

5.ராமையா என்கிற விவசாயக் கூலியின் குடிசையில் பயந்து ஒதுங்கிய நாற்பதுக்கும் மேற்பட்டவர்களை தீ வைத்துக் கொளுத்தியது பண்ணையார் கும்பல். இந்த கலவரம் பற்றி இரவு 8 மணிக்கு கீவளூர் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லப்பட்டும், இரவு 12 மணிக்கே காவல் துறையினர் வந்தார்கள்.

6. இந்தக் கொடுமைகளுக்கு தலைமை வகித்த கோபாலகிருஸ்ணனுக்கு நாகை அமர்வு நீதி மன்றம் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து. மேல் முறையீட்டுக்காக சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினார் கோபாலகிருஸ்ணன். அங்கு, நீதிபதி மகராஜன், “குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஸ்ணன் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை” என்று சொல்லி விடுதலை செய்தார். அதோடு, “கோபாலகிருஸ்ணன் போன்று கார், நிலம் உடமை வைத்திருக்கும் பணக்கார்ர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்கிற அரிய கருத்தையும் உதிர்த்தார் மகராஜன்.

7.கீழ்வெண்மணி கொடுமை நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1980 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள்… நினைவிடமாக்கப்பட்ட ராமையாவின் குடிசையில் கொலையுண்டு கிடந்தார் கோபாலகிருஸ்ணன். அருகில் நக்ஸல்பாரி இயக்க துண்டுப் பிரசுரங்கள் கிடந்தன.

8. விவசாயிகளை கூலிக்காகப் போராடத்தூண்டிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை பெரியார் கடுமையாக விமர்சித்தார். கூலி ஒரு பங்கு ஏறினால் விலைவாசியை பத்து பங்கு ஏற்றிவிடுவார்கள் என்று எதார்த்தத்தைச் சொன்னார். சமுதாய விடுதலையையும் நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்றார். அவரது நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சிலர், பெரியாரை கடுமையாக விமர்சித்தார்கள்.

ஆனால் கீழ்வெண்மணி படுகொலையை நிகழ்த்திய கோபாலகிருஸ்ணனை கொன்ற வழக்கில் கைதானவர்களில் ஒருவர் இடதுசாரி இயக்கத்தவர். மற்ற அனைவரும் பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இயங்கியவர்கள்!!

– சுந்தரம்