காதல் – சாதி: நிர்வாணமாக்கி.. வாயில் சிறுநீர் ஊற்றி….:  திருச்சி   கொடுமை!

Must read

பாலாஜி
பாலாஜி

திக்கசாதி பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞரை நிர்வாணமாக்கி, அவரது வாயில் சிறுநீர் ஊற்றி கொடுமைப்படுத்திய நிகழ்வு  திருச்சி அருகே நடந்துள்ளது.
இது குறித்து எவிடன்ஸ் அமைப்பின் கதிர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
“தலித் இளைஞரை சீறுநீர் குடிக்க வைத்து..அவர் கட்டிய தாலியை கத்தியால் அறுத்து வேறு ஒரு இளைஞரை கொண்டு தாலி கட்ட வைத்த கொடுமை நடந்து இருக்கிறது.திருச்சி அருகில் உள்ள கொளக்குடி கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் பாலாஜி.
ஆதிக்க சாதி சமுகத்தை சேர்ந்த நாகலட்சுமி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாலாஜி. திருமண நாள் அன்று அந்த பெண்ணின் உறவினர்கள் இருவரையும் விரட்டி பிடித்து உள்ளனர்.பாலாஜியை அடித்து சித்ரவதை செய்து நிர்வாணமாக்கி அவரது வாயில் சிறுநீரை பிடித்து ஊற்றி கொடுமை செய்து உள்ளனர்.அவர் கட்டிய தாலியை கத்தியால் அறுத்து சொந்த சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கொண்டு நாகலட்சுமி கழுத்தில் தாலி கட்ட வைத்து உள்ளனர்.
பாலாஜி எம்.எஸ்.சி, .பி .எட்.படித்து உள்ளார்.ஆசிரியராக பணியாற்றியவர்.அவரது சான்றிதழினை அந்த கும்பல் பறித்து சென்று விட்டது.வழக்கு இதுவரை பதிவு செய்யவில்லை.” – இவ்வாறு எவிடன்ஸ் கதிர்  தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
!
 

More articles

Latest article