காதலுக்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நடிகை!

Must read

nayan7-600x3001

மிழ்,தெலுங்கு இரண்டிலும் டாப் மோஸ்ட் ஹீரோயினாக திகழும் நயன்தாரா தனக்கென சில கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தார்.

படத்தில் நடிப்பதோடு சரி.. அந்த படத்தின் பிரமேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, டப்பிங் பேசுவதில்லை என்பதுதான் அவை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துவிட்ட நயன்தாரா. இதுவரை டப்பிங் பேசியதே இல்லை. இந்த கொள்கையை காதலன் (என்று கிசுகிசுக்கப்படும்!) இயக்குநர் விக்னேஷ் சிவனுக்காக தகர்த்திருக்கிறார்.

விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் “நானும் ரவுடிதான்” படத்தில்தான் இந்த கொள்கை தியாகம்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது, தனது வேண்டுகோளை ஏற்று நயன்தாராவே டப்பிங் பேசினார் என்று சொல்லி அகமகிழ்ந்தார் டைரக்டர் விக்னேஷ்.

“காதலுக்காக தனது கொள்கையை தியாகம் செய்திருக்கிறார் நயன். இதுவரை நயனின் அழகை ரசித்த தமிழ் கூறும் நல்லுலகம், இப்போது அவரது இனிமையான குரலையும் ரசிக்கப்போகிறது” என்று இந்த செய்திக்கு ஃபைனல் டச் வைக்கலாம்தான்.

ஆனால் அதற்குள் இந்த காதலையே நயன் தியாகம் செய்யாமல் இருக்க வேண்டும்.

More articles

Latest article