காதலால் சாதிக்கலவரம்!: பதற்றத்தில் விழுப்புரம்.

Must read

vlp_6

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமத்தில், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பிரிவினர் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சூரையாடினர். வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இதே போல வெவ்வேறு சமூகத்தைச் சேர்த இளவரசன் – திவ்யா காதல் திருமணம் செய்ததும் அதையடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டு கலவரம் மூண்டதும் நடந்தது. இந்த விவகாரம் இளவரசன் மரணத்தில் முடிந்ததும் அனைவரும் அறிந்ததே.

ஆகவே அரசு நேரடி கவனம் செலுத்தி உடையநாச்சி பகுதியில் அமைதியை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

More articles

Latest article