காங்கிரசுக்கு 32 கொடுக்க திமுக முடிவு?

Must read

evks_elangovan
திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த 25-ஆம் தேதி சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் 2011 தேர்தலில் ஒதுக்கிய 63 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால் 25 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.
இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் தொகுதி பங்கீ்டு விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா 1 தொகுதி வீதம் 32 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article