k6

அவனிடம் இருந்து call வருகிறது.

Hello

Oye என்ன பண்ற ?

சும்மா தான் இருக்கேன்.

நான் ஊர்ல இருந்து கிளம்புறேன். வெளியே வந்ததும் உனக்கு தான் call பண்றேன்.

எல்லாம் delete பண்ணிட தானே !

ஏ loosu பயப்படுற. படிச்சேன் ரொம்ப கஷ்டமா இருந்தது. சாப்டியா ?

ம் … சாப்டேன்

ரொம்ப miss பண்ணினையோ !

ம்…

சரி இப்ப உன்ன பார்க்க தான் வர்றேன்.

நிஜமாவா ?

ஆனா நேர்ல பார்க்கும் போது தெரியும் நீ எவ்வளவு என்ன miss பண்ணினனு.

எப்படி தெரியும் ? புரியல.

புரியல… loosu ரொம்ப miss பண்றவங்க நேர்ல பார்த்ததும் ஓடிவந்து

கட்டிக்குவாங்க…

நீ வரவேண்டாம்

ஏ… என்ன பார்கணுன்னு தோணலையா உனக்கு…

இல்ல வேண்டா…

பக்கத்தில் ஏதோ பேசுறாங்க யார் அது ?

ஸ்ரீ இருக்கு கூட கொடுக்கவா ?

ம்…

சில ரெகுலரான விசாரிப்புகளுக்கு பிறகு

Miss பண்றேன்னு சொல்றா, கடவுள் மாதிரின்னு சொல்றா, என்னோட

ஆன்மான்னு சொல்றது ஆனா வீட்டுக்கு வர்றேனா வேண்டாங்குரா…

என்னானாலும் ஒரு fb frd நானே கூட அலோ பண்ணமாட்டேன்.

Ok bye.

Hello என்னாச்சு

நீங்க ரெண்டு பேருமே என்ன ரொம்ப தப்பானவன பார்கிறிங்க So bye.

இணைப்பு துண்டிக்க படுக்கிறது. மீண்டும் பேசமுயற்சிக்க போன் எடுக்கவில்லை.

ஸ்ரீ & நாயகியின் id கள் block ஆகிறது.

இருவருக்கும் ஏதோ குற்றவுணர்வு ஆட்கொள்ள, இருவருமே மாறி மாறி

மன்னிப்பு sms அனுப்ப, block எடுக்க படுகிறது.முதலில் ஸ்ரீ add ஆக பிறகு நாயகி add

ஆகிறாள். நிறைய மன்னிப்புகளுக்கு பிறகு நிலைமை சரியாவதாக நினைக்கும்

போது எழுத்தாளன் ஒரு பதிவு வருகிறது. அதில் மிக மனவலியை உணர்த்தும்

பதிவு அது. படித்த நாயகி வரிகளின் வலிமை கண்டு துடிக்கிறாள்.தன்னால்

தானோ என்று தவிக்கிறாள். யாரையும் காயப்படுத்தாத மென்மை குணம் கொண்ட

நாயகிக்கு தன்னால் ஒருவர் மிகவும் காயப்பட்டிருப்பதும், அதுவும் தனக்கு

ஆறுதலாய் இருந்த ஆன்மா குற்றவுணர்வில் தவிக்கிறாள். Msg ல

இந்த பதிவுக்கு காரணம் நான் தானா !? சொல்லு pls…

சாப்டியா ?

அய்யோ கொல்லாத நீ எழுதியிருக்குறதுல இருக்குற வார்த்தைகள் நிச்சயம்

ரொம்ப காயப்பட்டிருந்தா தான் முடியும் சொல்லு…

போய் வேலைய பாரு…

சொல்லு pls… உன்ன அவ்வளவு காயப்படுத்தியது நான் தானா ?

ஆமாம்.

எனக்கு தண்டன கொடுத்திடு pls…

போ… போய் தூங்கு.

ஸ்ரீ யிடம் சொல்லி புலம்பி தவிக்கிறாள்.

விடு ஏதோ எழுதியிருக்கிறான் அவ்வளவு தான் சரியாகிடும்.

இல்ல ஸ்ரீ அவன் நல்லவன் வாளெடுத்து வெட்டினாலும் வலிக்காத நெஞ்சு

வார்த்தைக்கு வலிக்கிறது. இந்த வரிகள் வலியில்லேனா எப்படி வரும். நான் தான்

காரணம்னு சொல்லுது. கண்டிப்பா இதுக்கு எனக்கு தண்டனை வேண்ணும்.

ஹும்ம் free யா விடு… என்கிறாள் ஸ்ரீ காரணம் இவளும் தான் என்பதை பற்றி

கவலை படாமல். இரவு முழுவதும் உறக்கம் தொலைக்கிறாள் நாயகி. அதே

இரவில் வெறும் மன்னிப்பு, msg களில் நெருக்கம் ஆகிறார்கள் அவர்கள்

இருவரும். இதை பற்றி எதுவும் தெரியாத நாயகி தன்னையே தண்டித்துகொள்ள

துணிகிறாள். விடியலில் கொதிக்கும் எண்ணையை இடது கை முழுவது

கொட்டிக்கொள்கிறாள். நாயகனுக்கு smsல் என்னை தண்டிக்காதது உன்

பெருந்தன்மை, என்னையே தண்டித்துகொண்டேன் என்று சொல்கிறாள். எந்த

பதிலும் இல்லை. விஷயம் குடும்ப நண்பரான ஸ்ரீ க்கு தெரியவருகிறது. கை எரிந்த

நிலையில் துவண்டு கிடக்கிறாள் அந்த பைத்தியகார நாயகி. அவளை பார்க்க

வரும் ஸ்ரீ போனில் பேசிக்கொண்டே வருகிறாள் நாயகனோடு

உங்களோட loosu frd பண்ணிருக்க காரியத்தை பாருங்க, என்னனு கேளு.

போன் நாயகியிடம் கொடுக்க, வாங்க மறுக்கிறாள்.

Oye பேசு உன் ஆன்மா கிட்ட…

மறுக்க, ஸ்பீக்கர்ல போட

Hello

லூசா நீ… என்ன காரியம் பண்ணியிருக்க ? இதுக்கு என்ன காரணம் ன்னு புரியிதா

? உன்னோட மனசுக்குள்ள என்னை…

சட்டென்று இடைமறித்து

வேறேதாவது பேசுங்க pls

ஹும்… என்ன புதுசா போங்க வாங்க…

அமைதியாக இருக்கிறாள்.

முதலில் ஸ்ரீ யை கூப்பிட்டு டாக்டர் கிட்ட போ, எங்க உன் வீட்டுக்காரர்

வேலைக்கு போய்டார்.

டாக்டர் கிட்ட கூப்பிடலையா ? அவருக்கு தெரியும் தானே !

தெரியும் கூப்டார். நான் ஸ்ரீ யோட போறேன்னு சொல்லிட்டேன்.

என்ன காரணம்னு கேக்கலையா ?

கேட்டார் தூக்ககலக்கத்தில் பால் காய்ச்சினேன். பால் கொட்டிடுச்சுன்னு

சொன்னேன்.

ஹும்ம்ம் சரி டாக்டர் கிட்ட போ.

ஸ்ரீ அத கூட்டிகிட்டு போ

ம் சரி.

டாக்டரிடம் அழைத்து சொல்கிறாள் ஸ்ரீ. ஸ்ரீ யிடம் நிலையை விசாரித்து தெரிந்து

கொள்கிறான். அந்த கையோடு ஒரு கவிதை எழுதுகிறாள் நாயகி. அதையும்

நாயகன் inbox ல் அனுப்புகிறாள்.

இத நீயா எழுதின ?

ஆமா ஏ அப்படி கேக்குற ? நா எழுதுவேன் என்னோட உணர்வுகள எழுதிட்டு

படிச்சிட்டு கிழிச்சுருவேன் எப்பவும்.

Ho… நல்லா இருக்கு loosu !

thanks ! post பண்ணவா ?

வேண்டா

Y ?

உன்னோட husband, அவரோட frds எல்லாம் உன்னோட லிஸ்ட் ல இருப்பாங்களா ?

அதனால என்ன ? நான் உன்ன ஆன்மான்னு சொல்லுவேன்னு யாருக்கும்

தெரியாதே !

சரி உன் இஸ்டம்.

எப்படி போஸ்ட் பண்ணனும் ?

சொல்லிகொடுக்க அப்படி செய்கிறாள்.

அவள் முதல் கவிதை fbல வருது