கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 33: உமையாள்

Must read

41

சில தினங்கள் எதையும் பதிவிடாமல் அதிகம் ஆன் லைன் வராமலும் இருக்கிறாள் நாயகி.

பத்மினி பரப்பிய வதந்தி காட்டு தீயாய் பரவிக்கொண்டிருகிறது.

அபிநயா தன்னிடம் மிக நெருக்கமாக இருந்த நாயகன் இப்போது விலகி இருப்பதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்று காப்பாற்ற படுகிறாள்.

நாயகி இயல்பாக மாற முயன்று தோற்றுக்கொண்டு இருக்கிறாள். ஊர்வாயை மூடவும் முடியாமல், விட்டு ஓடவும் முடியாத ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகிறாள் நாயகி.

நாயகனிடமும், நாயகியிடமும் பலர் பல்வேறு கேள்வி கணைகளை தொடுக்கிறார்கள். தன் முதுகில் இருக்கும் அழுக்கை விட பிறர் முதுகை பார்க்கும் மனிதர்கள் தானே அதிகம் இந்த கேடுகட்ட சமுகத்தில்.

நாயகனை பொருத்தவரை தன் தவறுக்கு சாட்சியாக இருக்கும் சாட்சியங்களை அளிக்க முடிவு செய்கிறான்.
முதல் சாட்சி நாயகி காரணம் நாயகனின் யோக்கியதைகள் நன்கு தெரிந்த தைரியமான நடுநிலைவாதி. எவ்வளவு தான் நாயகன் மேல் அன்பும் மரியாதையும் இருந்தாலும் நியாயம் தர்மம் என்று வந்தால் நிச்சயம் உண்மை பக்கமே இருப்பார் என்பதை நாயகன் நன்றாக உணர்ந்திருந்தான்.

 இரண்டாவது  அபிநயா. நாயகனை பொருத்த வரை அபி ஒரு யூஸ் அன் த்ரோ. ஆனால் அபியோ அவனை விலக முடியாமல் பத்மினியிடம் சொன்னதால் அபியும் அவன் சாட்சிய லிஸ்டில் வருகிறார்.
மூன்றாவது பத்மினி உண்மையில் பத்மினி நோக்கம் சரியில்லை என்றாலும் அவர் செயல் மற்றவருக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது தான். என்றாலும் நாயகனை பொருத்தவரை அது அவனது வேஷத்தை கலைத்து விட்டிருந்ததே…

இவர்கள் மூவரையும் முதல் எதிரியாக பாவித்து அபி மற்றும் பத்மினியை பலகாரணங்களை சொல்லி சண்டையிட்டு block செய்கிறான் நாயகன்.
கடைசியாக நாயகியிடம் சொல்ல காரணங்கள் கிடைக்காத நிலையில் அவன் கையில் இருப்பது காவியாவை பற்றி நாயகி அபியிடம் சொல்லியது மட்டுமே. ஆனால் காவியா விவகாரத்தில் நடந்த எதையும் மறுக்க முடியாது என்பதும் உண்மை. மேலும் இதுவரை நாயகன் மேல் அதீத அன்பை மட்டுமே கொண்டிருந்த நாயகியை விலக்க காரணம் தேடிக்கொண்டிருகிறான் நாயகன்.

எலி தானே சென்று வலையில் மாட்டிக்கொள்கிறது.நாயகி தன் ஆன்மாவாகவே நாயகனை பார்த்தவள். அவன் சொந்த விஷயத்தை ( காவியா விவகாரம் ) அபியிடம் பேசியது தவறு என்ற குற்றவுணர்வு இருந்ததால் நாயகனிடம் மன்னிப்பு கேட்டு சமாதான செய்ய முயல்கிறாள் நண்பன் தானே என்று.

ஆனால் அதை சண்டையாக்கி தனக்கு சாதகமாககுகிறான் நாயகன்.
“எல்லாம் உன்னால் தான் என் மானம் மரியாதை எல்லாம் கெடுத்து விட்டாய் ” என்று கத்த ஒரு கட்டத்தில் நாயகி “எல்லாம் என்னால் தானே அப்போ என்னை block பண்ணிட்டு நீ நிம்மதியா இரு ” சொல்ல எண்ணம் ஈடேறிய மகிழ்ச்சியில் உடனே நாயகியையும் block பண்றான் நாயகன்.

ஏற்கனவே காட்டுத்தீயாய் பரவியிருந்த வதந்தி இன்னும் குளுந்துவிட்டு எரிகிறது. நாயகி & அபி இருவரும் தங்களது face book டியாட்டிவேட் செய்கிறார்கள். பத்மினி பல்லு புடுங்கிய பாம்பாகிறார்.

அவரவர் கைகளை கொண்டே அவரவர் கண்களை குத்திகுருடக்கிவிட்டு. சாட்சியங்கள் அழிந்த சந்தோஷத்தில் நாயகன் புதிதாய் இணையும் பெண்களிடம் அவன் லீலைகளை ஆரம்பிக்கிறான்.

(இத்துடன் “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்..” முதல் பாகம் நிறைவடைகிறது. விரைவில் இரண்டாம் அத்தியாயம் துவங்கும்.)

More articles

Latest article