4

தையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி தவிக்கிறாள்.

அந்த நிலையில் அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் உஷா ஆனந்த் பிரச்சனையில் உரிமையோடு உள்ளே வருகிறாள்.
” அதான் சம்மந்த பட்டவங்களே போகதன்னு சொல்றாங்களே பா…”

” எனக்கு மனசு சரியில்ல உஷா “

” எனக்கு எல்லாம் தெரியும் பா அபி சொன்னா. விடுங்க கொஞ்சநாள்ல எல்லாம் சரியாகிடும் ” கொஞ்சம் ஆதரவாக பேசும் உஷா விடம் புலம்பி தள்ளுகிறாள் நாயகி.

” நா என்ன தப்பு பண்ணினேன் சொல்லுங்க பா… அபிநயா அன்னிக்கி ரொம்ப feel பண்ணிக்கிட்டு பயந்து இருந்தாங்க அதனால சமாதானம் பண்ண வாய்தவறி ஒளறிட்டேன் அதுக்கு போய் எப்படியெல்லாம் பேசுறான். சரிப்போ உனக்கே உண்மை புரியும்னு விட்டாலும் மத்தவங்க என்னை என் இப்படி தப்பா பேசுறாங்கனே புரியல …
நீங்களே சொல்லுங்க உஷா நா ஏன் இவனை பத்தி தப்பா பேசபோறேன் சொல்லுங்க… இதையெல்லாம் யார் பண்றாங்கனே புரிய மாட்டேங்குது… ” கொட்டிதீர்கிறாள் நாயகி.

” Feel பண்ணாதிங்க யார் என்ன சொன்னா என்ன உங்களை உங்களுக்கு தெரிந்தால் போதாத… விடுங்க “

” யாரோ பேசிட்டு போகட்டுன்னு தான் அமைதியா இருந்தேன் இப்ப இவன் கூட புருஞ்சுகாம பேசுறான்…”

” அவனையும் உங்களை கேட்டது போல யாரவது டார்சர் பண்ணியிருப்பாங்க அதான் அப்படி நடந்துகிறான்.”என்கிறாள் உஷா.
” இருக்கட்டும் உஷா அதுக்கு நா எப்படி காரணமாவேன் சொல்லுங்க… என்னையும் அவனையும் சம்மந்த படுத்தி பேசுறாங்க தெரியுமா உஷா !? இதை கூட நான் தான் சொன்னேனா… எதையும் புருஞ்சுகாம ச்சா…
வேண்டா உஷா நா போறேன் விட்டுடுங்க… “

” இப்ப நீங்க போனீங்கனா அவங்க எல்லாம் பேசுறதும் உண்மையா தானே ஆகும் பா…pls யோசிங்க ” உஷாவின் வார்த்தைகள் ஆறுதலாகவும் சூழ்நிலையை உணர்த்துவதாகவும் அமைகிறது.

மீண்டும் வருகிறாள் நாயகி fb க்கு அவளுக்கும் வேறு போக்கிடமில்லையே !
அன்பான நட்பு வட்டம் அவளை ஆதரிக்க பதிவுகள் போட்டுகிறாள் எப்பவும் போல.
ஆனாலும் ஒரு வெறுமையை தவிர்க்க முடியவில்லை. காரணம் நாயகனின் கோவம் மற்றும் ஸ்ரீயிடம் பழைய மாதிரி நெருக்கமாக இருக்க ஏனோ நாயகியாலும் முடியாதது போனதுமே, அவளின் இயல்பும் அதுவே பிடிக்கவில்லை என்றால் விளக்கிகொள்வாள் தன்னை. அதுவே இருவரிடமும் நடந்தாலும் நாயகன் கோவத்தில் ஒரு நியாயம் இருப்பதாய் தோன்றுகிறது நாயகிக்கு. காரணம் அவன் அனுமதி இல்லாமல் அவன் சொந்த விஷயத்தை அபியிடம் பகிர்ந்தது தப்பு என்று நினைக்கிறாள்.

அளவுக்கு மீறிய அன்பு ஒருவரின் தவறை எளிதாக ஏற்றுக்கொள்ளும் முட்டாள் தனத்தை செய்ய துணிந்து விடும். அதே அவளின் நிலையும் inboxல் பேசவிரும்பாமல் ஒரு பதிவில் மன்னிப்பு கேட்கிறாள் நாயகி.

தன் யோக்கிய வேஷம் களைந்ததில் இருந்தே கடும் கோவத்தில் இருக்கும் நாயகன், நாயகியின் எல்லா செயலிலும் குற்றத்தை மட்டுமே தேடுகிறான். அந்த பதிவையும் சரியாக பார்க்காமல் தவறாக புரிந்துகொள்கிறான். அதிலும் நாயகி தன்னை அசிங்க படுத்திவிட்டதாக நினைக்கிறான். இதை ஸ்ரீயிடமும் சொல்கிறான். நாயகியின் விலகலால் கொஞ்சம் குற்ற உணர்வில் இருக்கும் ஸ்ரீ அவனிடம் நாயகிக்கு சப்போர்ட் பண்ணுகிறாள். புதிதாய் ஸ்ரீ நாயகிக்கு சப்போர்ட் பண்ணினதில் குழப்பம் அடையும் நாயகன்.

” பிணம் தின்னி கழுகிடமா பிதற்றினென்னு எழுதியிருக்கு போய் பார் ” ன்னு கத்த என்ன நடந்ததுன்னு புரியாத ஸ்ரீ நாயகியிடம் விளக்கம் கேட்கிறாள்.
” ஆண்டவா… அது அவனை சொல்லல அதுக்கு அடுத்த லைன் எதையும் அவன் படிக்கலையா !? முதலில் முழுசா படிக்க சொல்லு… எல்லாத்தையும் தப்பா பாத்தா தப்பா தான் தெரியும் ஸ்ரீ. சத்தியமா மன்னிப்பு தான் கேட்டிருக்கேன் அதுல…” வருத்ததோடு சொல்லிமுடிக்கும் நாயகியிடம் ஸ்ரீ.

” கொஞ்ச நாளைக்கு எதையும் எழுதாத “

” ஏன் ஸ்ரீ ?”

” அவன் ரொம்ப குழப்பத்தில் இருக்கான் உன்ன பத்தி யார் யாரோ என்னன்னவோ சொல்லியிருக்காங்க அதை நம்புறான். உன்னை பத்தி பேசினாலே கோவப்படுறான் அதனால சொல்றேன். “

” என்ன பத்தி யார் என்ன சொன்னாங்களாம் !? ஸ்ரீ “

” அதை சொல்லல “

” யார் என்ன வேன்னுனாலும் சொல்லட்டும் ஸ்ரீ வேண்டாங்கல இவன் என்னோட friend தான என்னை கேக்கலாம்ல…
என் கிட்ட கூடத்தான் யார் யாரோ ஏதேதோ சொல்றாங்க ஆனா நா கண்டுக்கலையே ஸ்ரீ…” ஆதங்கத்தை தோழியிடம் சொல்ல

ஸ்ரீ கவிதையின் விளக்கத்தை மட்டும் நாயகனிடம் சொல்கிறாள். ஆதங்கம் அங்கே அனாதையாய் நிற்கிறது.

மீண்டும் அந்த பதிவை முழுதாய் படித்து விட்டு ஒரு லைக் போட்டு புரிந்து கொண்டதை உணர்த்துகிறான் நாயகன் ஆனால் பேசவில்லை.

 சமாதனம் ஆகிவிட்டானு நினைக்கும் நாயகி கொஞ்சம் அமைதியடைகிறாள்.

அதுவும் புயலுக்கு முன் வரும் அமைதியாகவே அமைகிறது.

(வரும் திங்கள் அன்று இறுதிப்பகுதி வெளியாகும்.)