k18

மீட்டிங் இரண்டு மணி நேரம் நீடிக்க அதில் பிசினஸ் பேசு என்னோவோ வேறு

30,40 நிமிடமே மற்றவை எல்லாம் வெறும் சுய புராணமே. நாயகனோடு தனக்கான

நெருக்கத்தை காரணமே இன்றி சொல்லிகொண்டிருந்தால் சவிதா.

உங்களுக்கு சேலை கட்ட தெரியுமா !? என நாயகியிடம் கேட்கும் சவிதா. என்ன

கேள்வியிது ஒரு பொம்பளைக்கு சேலை கட்டதெரியாமல் எப்படி இருக்கும் ?

தெரியும் என்கிறாள் நாயகி.

எனக்கு தெரியாது.ஒரு முறை எழுத்தாளருக்காக சேல கட்டி… அப்போ அது

சொல்லுச்சு உனக்கு மூடவேண்டியத்தை மூடதெரியல இனிமேல் கட்டாதானு. (

கட்டவேண்டியவன் கிட்ட காட்டாம கண்டவன் கிட்ட ஏன்டீ யம்மா காட்டுறீங்க.

ஆண்டவா இப்படி தானா வந்து விழுந்த தழுவத்தான் தோணும்.நீ நடத்து ராசா,

ராசாத்தில ஆரம்பிச்சு ராசா பொண்டாட்டி வரைக்கும் விழறாங்கான உண்மையில

அடுச்சுக ஆளேயில்ல போ… ) மெல்லிய புன்னகையோடு நமக்கு எதுக்கு வம்புனு

நாயகி இருக்க, ஏற்கனவே எரியிற நெருப்புல நீ வேற ஏண்டீ எண்ணைய

ஊத்துறன்னு கேக்க முடியாம நாயகன் நெளிஞ்சுகிட்டே பச்ச சிரிப்பு சிரிக்க, ஏனோ

மனதுக்குள் அந்த சூழலை ரசிக்கிறாள். நாயகியும் சவிதாவும் ஒன்றாக கிளம்பு,

வழியெங்கிலும் விசாரணைகள். கொய்யால நம்ம இவளை மீட் பண்ணனுன்னு

நினைச்சதை விட இவ நம்மளை மீட் பண்ண ரொம்ப தவிச்சிருக்க போல ன்னு

நாயகிக்கு தோன்றுகிறது. மறுநாள் இடம் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு

போக,பில்டப்புகும் நடந்த விசயத்திற்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்க (lTC லாபீ

ல நடந்த ரெண்டு மணிநேர மீட்டிங் ல ஒரு வாட்டர் பாட்டில் கூட கிடையாது )

நாயகனிடம் விசரிகிறாள்.

என்ன நீ சொன்னதுக்கும் நடக்குறதுகும் சம்மந்தமே இல்லமாம இருக்கு.

Loosu நிஜமாவே அவங்க பெரிய VIP. பிசினஸை பாரு. ( பிசினஸ் முக்கியம்.

மார்கெட் டல்லா இருக்கு இப்போ எந்த கிளைன்ட் வந்தாலும் work பண்ணனும்.

பார்போம்.) அடுத்த சந்திப்பில் சவிதாவும் நாயகியும் மட்டும் சந்திக்க, நாயகி

மனதிற்குள் தீர்மானிகிறாள்.பிசினஸை தவிர வேற எதையும் பேசக்கூடாது

என்று.( முதல் நாள் காரில் வரும் போது அந்த பெண் துருவி துருவி விசரித்தளால்

)

சிறிது நேர காத்திருப்புக்கு பின் வர, Hai… ரொம்ப நேரமா wait பண்றீங்களா ?

இல்ல கொஞ்ச நேரம் தான் ஆகுது.

Sorry கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.

பரவாயில்ல மேம்…

நேத்து உங்க டைம் லைன் பார்த்தேன் ரொம்ப நல்ல எழுதுறீங்க.

Thanks மேம்…

நேர்ல பார்குறதுகும் உங்க எழுத்துல பார்குறதுகும் சம்மந்தமே இல்ல.ஆச்சர்யமா

இருந்தது.

Thank U.

உங்க ஹஸ்பென்ட் போட்டோ பார்த்தேன்.அரசியல்ல இருக்காரா.

இல்லையே ஏன் மேம்.?

ஒரு commend பார்த்தேன் (ஆகா… commend நோடிருக்கீங்களா நடத்துங்க )

இல்ல அது குடும்ப நண்பர் கிண்டல் பண்ணியது.

Ho… நீங்க எனக்கு req கொடுங்க என் id தெரியும்ல

தெரியும் ஆனா யாருக்கும் req கொடுக்குற பழகம் இல்ல Sorry மேம்.

எனக்கு req கொடுக்க தெரியாது. எழுத்தாளர் தான் எல்லாம்

சொல்லிகொடுக்கும்.(இதையெல்லாம் யார் கேட்டா.)

நாயகி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சுயபுராணம் ஆரம்பிக்கிறது.

அதுக்கு(எழுத்தாளருக்கு) எங்க வீடு ரொம்ப பிடிக்கும். அமைதியா இருக்கும்.

அதுக்கு போக மனசே வராது.

ஏன் மேம் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்களா ?(ஏதாவது பேசி தொலையனுமே )

எனக்கு குழந்தைகள் இல்ல வீட்ல நானும் ஒரு வேலைகார பொண்ணும் மட்டும்

தான்.

Mm

ஒரு முறை எங்க சொந்தகாரவங்களை ஏர்போட்ல இருந்த எழுத்தாளர் தான்

கூப்பிட்டு வந்தார்.( நாயகியின் மைண்டு வாய்ஸ்: இந்த பிட் எதுக்கு !)

சொந்தகாரங்களுக்கும் எழுத்தாளரை தெரியும்.( அதுக்கு தான் இந்த பிட்டா.. )

எங்க வீட்ல யாரையும் நம்பி வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டோம். (இது எதுக்கு

வடிவேலு ரேஞ்சுல நாயகி பார்க்கிறாள்)

frds கொஞ்சம் எழுத்து பிழை இருக்கலாம் இருந்தால் மன்னிச்சிடுங்க நேரமின்மை

காரணமே sorry…