சமீபத்திய சென்னை வெள்ளம், “இயற்கை பேரிடரா, செயற்கை பேரிடரா” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்  தி.மு.க. தலைவர் கருணாநிதி. இந்த வெள்ள சேதம் குறித்து அவர், கவர்னர் ரோசய்யாவிடம் அளித்த மனுவையும் நேற்று நாம் பிரசுரித்திருந்தோம். இந்த நிலையில், “கருணா பிறப்பே ஓர் இயற்கை பேரிடர்!

அவர் கரத்தில் சிக்கிய ஆட்சியே செயற்கைப் பேரிடர்!” என்ற தலைப்பில் அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் இதழ், கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், புறம்போக்கு நிலத்தை தாரைவார்த்தவர் கருணாநிதிதான் என்று குறிப்பிட்டிருக்கிறது.

அந்த கட்டுரை வருமாறு:

 

karunanidhi--621x414

 

“இயற்கைப் பேரிடரா, செயற்கைப் பேரிடரா என்று வரலாறு காணாத மழைப் பொழிவையும், அதனால் ஏற்பட்டிருக்கும் வெள்ளச் சேதங்கள் குறித்தும் புரட்டுக் கருணாநிதி குரளி வித்தை செய்து புரளி விதைக்கப் பார்க்கிறார்.

சரி, இயற்கைப் பேரிடரா, செயற்கைப் பேரிடரா என்று அவர் எழுப்பும் வினா-வுக்கு விடை காண்பதற்கு முன்பாக, கொஞ்சம் வரலாற்றின் பின்னோக்கிப் போவோம்!

எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கி-னால் அது ‘ashஆக (சாம்பலாக) மாறும். அந்த ஆஷையே சுட்டா என்ன ஆகும் என்று ஆராய்ச்சி செய்தவன் சுதந்திரப் போராட்ட வேங்கை வாஞ்சிநாதன்.

ஆம். மணியாச்சி ரயில் சந்திப்பில் உல்லாசப் பயணம் புறப்பட காத்திருந்த கொடுங்கோலன் ஆஷ் துரையை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு வீரச் சாவு எய்திட்ட-போது…

போலீசார் ஓடிவந்து ஆஷ் துரையின் பிணத்தையும், வாஞ்சிநாதன் பிணத்-தையும் கைப்பற்றுகிறார்கள். வாஞ்சி-நாதனின் உடுப்புகள் சோதனை இடப்-படுகிறது. அவன் சட்டைப் பையில் கொஞ்சம் சில்லரையும், கூடவே தூத்துகுடியிலிருந்து மணியாச்சி சந்திப்பு வரைக்குமான ரயில் டிக்கெட்டும் கண்டெடுக்கப்பட்டது.

ஆம். ஆஷ் துரையை சுட்டுக் கொன்று-விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள தீர்க்கமாய் முடி-வெடுத்து புறப்பட்டவனுக்கு அதுதான் தனது கடைசி ரயில் பயணம் என்றாலும் அந்தப் பயணம் ஓர் வீரச் சாவை எய்து-வதற்கான விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் பயணம் என்றாலும், அவன் ‘வித்தவுட்’டில் போகவில்லை. செத்துப் போகத்தான் போகிறோம் என்றபோதும் பயணச்சீட்டோடு பயணித்தான்.

இதுதான் போராளியானாலும் ஓர் மனிதனின் நேர்மை, ஒழுக்கம் என்பது.

இந்த தூய வரலாற்றை மனதில் நிறுத்திக்-கொண்டு இதோ அடுத்தொரு கழிசடை வரலாற்றை கவனிப்போம்.

karuna

பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க வக்கில்லாமல் திருட்டு ரயிலி-லேறி திருவாரூரிலிருந்து புறப்பட்டு வந்த அந்தத் தீயசக்தி ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்யும் அவலம் நிகழ்ந்தது. அதன்மூலம் ஆசியாவைக் கடந்து உலகப் பணக்காரராய் அது உருவெடுத்தது.

இந்தியாவில் விமானக் கம்பெனி வைத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் என்கிற உச்சத்தில் இன்று அது நிற்கிறது என்றால் இதற்குப் பெயர்தானே இயற்கைப் பேரிடர்.

சரி, அடுத்து செயற்கை பேரிடருக்கு வருவோம். அந்த செயற்கை பேரிடரை-யும் உருவாக்கியது தீயசக்தி என்கிற இயற்கை பேரிடர்தான்.

ஆம். 2006-லே தமிழகத்தின் போதாத காலத்தால் மைனாரிட்டி ஆட்சி அமைத்த கருணாநிதி, தன் குடும்பமும், குறிப்பாக தனது தில்லுமுல்லு கட்சியினரும் வெகுவாக செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலம் குறைந்த காலத்தில் கோடானு கோடிகளைக் குவிப்பதற்காக ஏதுவாக அவர் கொண்டுவந்த அரசாணை-தான் அந்த செயற்கை பேரிடர் என்பதும்.

ஆம், 30.12.2006-ல் அரசு புறம்-போக்கு நிலங்களில் குடியிருப்பவர்-களுக்கெல்லாம் பட்டாக்கள் கொடுக்க-லாம் என்று அரசாணை போட்டது அப்போதைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி.

இதனால்தான் ஏரிகளும், குளங்களும், நீர்நிலை

களும், நீர்ப்பிடிப்பு பகுதிகளும் புயல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தன பகுத்தறியப்படாது பொத்தாம் பொதுவாக கத்தை பணத்திற்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் துணையோடு.

இதன்மூலம் அப்பாவிப் பொதுமக்கள் அந்த நிலங்களை தங்கள் வியர்வை சிந்திய பணத்தைக் கொடுத்து வாங்கவே, கருணாநிதி கட்சிக்காரர்களின் சட்டைப் பைகளிலோ கத்தை கத்தையாய் குவிந்தது பணம்.

அப்படி, ஏமாந்த மக்கள்தான் இன்றைய மழை வெள்ளச் சேதங்களில் நீரில் மூழ்கி நிம்மதி இழந்திருக்-கிறார்கள் என்றால் இப்போது சொல்லுங்கள், கருணாநிதி குறிப்பிடுற இயற்கைப் பேரிடரும், செயற்கைப் பேரிடரும் அவரும் அவரது அன்றைய அரசாட்சியும்தானே!

– சாட்டை”

– மேற்கண்டவாறு, “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.”  நாளிதழ், கட்டுரை வெளியிட்டுள்ளது.