கருணாநிதி இறைத்தூதரா?: கண்டித்து ஆர்ப்பாட்டம்

Must read

 
k
தி.மு.க. தலைவர் கருணாநிதியை, “இறைத்தூதர்” என்று குறிப்பிட்டு  தி.மு.க. மேடையில் நாகராஜ் என்பவர் பேசியதற்கு இசுலாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரும் வியாழக்கிழமை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு , கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக அறிவித்துளஅளது.
இது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கிையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லிமகள் நம்புகின்றனர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரிய மகானாக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் தூதர் என்று எந்த முஸ்லிமும நம்ப மாட்டார் நம்பக் கூடாது.
இந்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருணாநிதியை இறைத்தூதர் என்று பேசியிருக்கிறார்கள்.  இது கடும் கண்டணத்துக்கு உரியது.
அல்லாஹ்வின் தூதர் என்பதைத் தவிர்த்து நபிகள் நாயகத்தின் ஒழுக்கம் நாணயம் நேர்மை தியாகம், தன்னலமற்ற வாழ்வு அரசியல் என்று எத்துரையை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியோ மற்ற அரசியல் வாதிகளோ நபிகள் நாயகத்தின் கால் தூசுக்கு சமமானவர்களாக ஆகமுடியாது என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையைக் கேலிக்கூத்தாகி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆகவே கருணாநிதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் வியாழக்கிழமை, கருணாநிதியைக் கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
 

More articles

Latest article