செ.ச. செந்தில்நாதன்  அவர்களின் முகநூல் பதிவு:
ன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார் வைகோ. கேப்டன் டீவியில் நேரலை பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலத்தான் பொங்குகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

தி.மு.கவில்  இருந்தபோது கருணாநிதியின் காலில் விழுந்த வை.கோபால்சாமி
தி.மு.கவில் இருந்தபோது கருணாநிதியின் காலில் விழுந்த வை.கோபால்சாமி

இடையே சந்திரகுமாரின் வெளியேற்றத்தைப் பற்றி விளாசித்தள்ளிக்கொண்டிருந்தார். ஆச்சரியமில்லைதான்.

அப்போது சந்திரக் குமாரின் செயல்பாட்டை மிகமோசமாக வர்ணித்தார். அந்த “துரோகத்தை” அ்மபலப்படுத்தும்போது அவர் “வேறு ஒரு தொழிலைச் செய்யப்போகலாம்” என்றார். உலகத்தின் ஆதித்தொழிலைச் செய்யலாம் என்றார். இதுவும்கூட திராவிட வாய்ச்சவடால் ஸ்டைல்தான்.
அதன் பிறகு கருணாநிதியும் உலகத்தின் ஆதித் தொழிலைச் செய்யப்போகலாம் ஒரே போடாக போட்டா்ர்..
உலகின் ஆதித் தொழிலைச் செய்பவர்களை எதற்கு இழுக்கவேண்டும் எனறே தெரியவில்லை. அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு படு்க்கமாட்டேன் என்றார்களா? நடுராத்திரியில் அணி மாறினார்களா?
துரோகிகளாகவோ அரசியல்வாதிகளைப் போல மோசமானவர்களாகவோ அவர்கள் இருக்கிறார்களா? பாவம் அவர்கள். சரி, அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர் “ஆம்பிளைகளைப்” பற்றி நமக்குத் தெரியும்தானே!
அடுத்து சொல்கிறார் வைகோ. கருணாநிதிக்கு வேறு ஒரு தொழிலும் தெரியுமாம்? நாகஸ்வரம் வாசிக்கிற தொழில்!
எதற்காக வைகோ இந்த இடத்தில் கருணாநிதியின் சாதியை இழுக்கிறார்? அது வெறும் தொழில் சம்பந்தப்பட்ட வார்த்தை அல்ல. ஏனென்றால் கருணாநிதி ஒரு நாகஸ்வர வித்வானாக அறியப்பட்டவர் அல்ல. அவரோடு அதை சம்பந்தப்படுத்துவதாக இருந்தால் அது அவரது சாதியைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தானே ஒழிய. வேறு ஒன்றும் அல்ல.
பத்தாண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியை சந்தித்த வைகோ (0306.2015)
பத்தாண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியை சந்தித்த வைகோ (0306.2015)
வைகோவின் வார்த்தைகளை இந்த சாதிய சமூகத்தில் ஒரு பச்சைக் குழந்தைகூட புரிந்துகொள்ளும். அவர் கருணாநிதியின் ஜாதியை, – நாகஸ்வரம் வாசிப்பதைத் தொழிலாக கொண்டிருக்கும் ஒரு ஜாதியை – சுட்டிக்காட்டி, அதை உலகின் ஆதி தொழிலைச் செய்பவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்.
எப்படிப்பட்ட ஆதிக்க சாதி மனநிலையும் ஆணாதிக்க மனநிலையும் இருந்தால் வைகோவால் இப்படி பேசமுடியும் என்று யோசித்துப்பாருங்கள்.
வைகோவின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அவரே அடிக்கடி வெளிப்படுத்திவருகிறார். அதில் ஒரு அம்சம்தான் இது. அன்று “கருவின் குற்றம்” என நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் பிறப்பை கேள்விக்குள்ளாகியது தொடங்கி, இன்று ஆதி தொழில், நாகஸ்வரம் வாசிக்கும் தொழில் தெரிந்தவர் என கருணாநிதியை வைகோ விமர்சிப்பது வரை, மதிமுக தலைவர்கள் பலருக்கும் வேறு கட்சிகளில் இருக்கும் தமிழ்நாட்டு ஆண்டை சாதித் தலைவர்களுக்கும் கருணாநிதியின் சாதியைச் சுட்டிக்காட்டி விளையாடுவது ஒரு நீண்டகால சாதிவெறி விளையாட்டு.
வைகோ அப்படிப் பேசியதைக் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்நதிருந்த திருமா, ஜிஆர். முத்தரசன், ரவிகுமார் போன்றோரின் மனத்தில் அப்போது எத்தகைய எண்ணவோட்டம் இருந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது.
(டிஸ்கி: இது கருணாநிதி ஆதரவு பதிவு அல்ல. கருணாநிதியைத் தூக்கியெறிய ஆயிரம் காரணம் உண்டு. இப்போதும் ஜெ-கருணா இருவர் கூட்டணிக்கு எதிராகவே நிற்கிறேன். அது வேறு. ஆனால் வைகோவிடம் உறைந்திருக்கும் ஆண்டை சாதி மனோபாவததைப் பற்றி குறிப்பிடவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பேர்போன சாதியொழிப்பாளர்கள் அந்த ஆளை நம்பி தங்களுக்கு தாங்களே குழிபறித்துக்கொண்டிருக்கிறார்களே! )”
–  இவ்வாறு தனது பதிவில் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.