·2

ம்யூனிஸ்டுகள் வைகோ-வோடு கூட்டணி சேர்வதா? கம்யூனிஸ்டுகளின் கொள்கைக்கு அது இழுக்கல்லவா என்று முகநூல் நண்பர்கள் கொதிக்கிறார்கள்.

என்ன குற்றம் கண்டீர்? தருமம் யார்க்குரைக்க வந்தீர்?

வைகோ-வுக்கு பிடித்த ஈழமும் புலிகளும் கம்யூனிஸ்டுகளுக்கு வேப்பங்காயாகக் கசக்கலாம், வைகோ அவ்வப்போது போய் வருகிற பாஜக-வை ஏறிட்டுப் பார்க்கக்கூட கம்யூனிஸ்டுகளுக்கு வெறுப்பாக இருக்கலாம். ஆனால் ‘புரட்சி’யின்பால் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் ஈர்ப்பே எல்லா வேறுபாடுகளையும் மறந்து புரட்சிப் புயலோடு அவர்களை இணைக்கிறது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர், புரட்சிப் புயல் என்று தமிழ்நாட்டில் அவர்கள் கைகோர்க்காத புரட்சியாளர்கள் யாராவது உண்டா. எல்லாமே புரட்சிக்காகத்தானே நடக்கிறது. தெரியாம கோவப்பட்டுக்கிட்டு… போங்க பாஸ்!

VAD Bala